மாங்காடு ஜூலை 17, 2022

வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வலுவான கட்டமைப்புகளை மாவட்டங்கள் தோறும் உருவாக்கிட வேண்டி நமது தலைவர் அவர்கள் மாநில, மண்டல மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து கலந்தாலோசனை கூட்டம் இனிதே நடைபெற்றது.

தலைவரின் தெளிவான உரை தொடர்ந்து மாற்றுக் கட்சியில் (அதிமுக) இருந்து மய்யத்தில் இணைந்த 300 நிர்வாகிகள், மய்யம் கட்சியிலும் தொழிற்சங்கத்தில் இணைந்த 100 பெண் ஆட்டோ ஓட்டுனர்கள், சேவை பெரும் உரிமைச் சட்டம் பிரச்சாரம் துவக்கமும், கமல் கலைக்கூடம் துவக்கம் என தொடர்ந்து நடந்த நிகழ்வுகளின் முத்தாய்ப்பாக தலைவர் அவர்கள் தம் சொந்த பணத்தில் இருந்து 1 கோடியே 50 லட்சங்களை கட்சியின் வளர்ச்சி நிதியாக அளித்தார். இதற்கு முன்னர் தனது சினிமா நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்த விக்ரம் திரைப்படம் பாடல்கள் வெளியீட்டு விழாவில் படத்தின் மூலம் கிடைக்கும் வருவாயில் கட்சியின் வளர்ச்சிக்கு அளிப்பேன் என்றார் அதை சொன்னதோடு நின்றுவிடாமல் இன்று நடந்த கூட்டத்தில் வழங்கினார்.

மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு

2024 பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது, கட்சிக்கட்டமைப்பை வலுப்படுத்துவது, சேவை பெறும் உரிமைச் சட்ட பிரச்சாரத் துவக்கம், மாற்றுக்கட்சியினர் மய்யத்தில் இணைவது, கமல் கலைக்கூடம் துவக்கம் உள்ளிட்ட நிகழ்வுகளோடு இன்று நடைபெற்ற மய்யத்தின் மாநில,மாவட்ட நிர்வாகிகள் கலந்தாலோசனைக் கூட்டத்தில் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் எழுச்சியுரையாற்றினார். நிர்வாகிகளின் கேள்விகளுக்கு விரிவாக பதிலளித்த தலைவர், மாவட்டந்தோறும் பயணித்து கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்துமாறு மாநில நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.

https://youtu.be/KJ3RTOGRPxg