சென்னை ஜூலை 17, 2022

பெண்கள் இன்றி இவ்வுலகில் ஓர் அணுவும் அசையாது. சமையலறையில் உழன்றுகொண்டிருந்த பெண்கள் வெளியில் வந்து பல பணிகளில் சிறந்து விளங்கிவருகிறார்கள். தயங்கி நின்ற காலங்கள் எல்லாம் கடந்து போய் துணிந்து நிற்கின்றார்கள் எதிலும் வென்று நிற்கிறார்கள்.

ஆணுக்கு நிகர் பெண் எனும் நாட்கள் வந்து பல ஆண்டுகள் கடந்து விட்டது. சைக்கிள் ஓட்டுவதற்கு கட்டுப்பாடுகள் மலையேறி விண்கலங்கள் இயக்குகிறார்கள்.

பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் மற்றும் நம்மவர் தொழிற்சங்கப் பேரவையில் இன்று 100 பெண் ஆட்டோ ஓட்டுனர்கள் தங்களை உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டு சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்.

தங்கள் உரிமைகளை வென்றெடுக்க ஓர் இயக்கம் தேவை அந்த இயக்கம் பேருக்கு என்றில்லாமல் ஊருக்கு உழைக்கும் மக்கள் நீதி மய்யம் என்பதே உண்மை.

வருக மகளிர் படையே வருக என வாழ்த்தி வரவேற்கிறது மக்கள் நீதி மய்யம் – நம்மவர் தொழிற்சங்கப் பேரவை.