பல்லாவரம், ஜூலை 16, 2022

நமது மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஊடகம் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் மாநில இணை செயலாளர் திரு தினேஷ் பாஸ்கர் அவர்களின் ஏற்பாட்டில் சிறப்பு இ சேவை முகாம் பல்லாவரம் பகுதி வாழ் மக்களுக்காக இன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதில் குடும்ப அட்டை மற்றும் ஆதார் கார்டு ஆகியவற்றை விண்ணப்பித்து அல்லது அதில் ஏதேனும் மாற்றம் இருப்பின் அதனை செய்து கொடுத்தல் எனும் சேவையினை முழுவதும் சிறப்பான முறையில் இலவசமாக செய்து தர வேண்டி மக்களின் பயன்பாட்டுக்காக இன்று வெற்றிகரமாக நடத்தி வைக்கப்பட்டது.

திரு தினேஷ் பாஸ்கர் அவர்களின் கருத்துக்களை கீழே தந்துள்ளோம்

“செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் தொகுதி மாவட்ட மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளுடன் இணைந்து மாநில மீடியா & IT Wing சார்பாக, இலவச இ-சேவை முகாம் சிறப்பாக நடைபெற்றது. எதிர்பார்த்தைதைவிட மக்களின் பெருமளவில் தேவை பூர்த்திசெய்யப்பட்டது. மக்களின் அடிப்படை தேவை அறிந்து செயல்படும் நீதி மய்யம் என்று பலரும் வெகுவாக பாராட்டினர். மாவட்டம் தோறும் இதுபோல சேவை முகாம் நடத்த குழு தயார் நிலையில் உள்ளது. தங்கள் பதியில் இதுபோன்ற முகாம் நடத்த விழைவோர் தொடர்புகொள்ளலாம். மக்களுக்கான நீதியாய் மக்களுடன் மய்யமாய் தலைவரையும் கட்சியையும் தமிழகம் முழுக்க கொண்டு சேர்ப்போம். நன்றி”..🙏🏻 – அன்புடன் தினேஷ் பாஸ்கர்

இதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து மய்ய நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் – மய்யத்தமிழர்கள்