குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே காலை மற்றும் மாலை நேரங்களில் சில வாலிபர்கள் நின்று கொண்டு கிண்டல், கேலி செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் சொல்ல, பெற்றோர்கள் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளிடம் தெரிவித்தனர். மாவட்ட செயலர் காமராஜ், நகர மகளிரணி செயலர் சித்ரா உள்ளிட்ட நிர்வாகிகள் மாணவிகளுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என குமாரபாளையம் எஸ்.ஐ. மலர்விழியிடம் புகார் மனு கொடுத்தனர்.

Source: Boys are teasing girls Complaint by makkalniithimayyamkadsi | மாணவிகளிடம் வாலிபர்கள் கிண்டல் செய்வதாக மக்கள் நீதி மய்யம் புகார் (instanews.city)

களத்தில்_ மய்யம்

மக்கள் நீதி மய்யம் என்றும் மக்கள் பணியில் எங்களின் கோரிக்கையை ஏற்று குமாரபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் காவல் துறையினர் ரோந்து .காவல்துறையினருக்கு ம நீ ம மனமார்ந்த நன்றிகள்.