பெரியாங்குப்பம், ஜூலை 12, 2022

மக்கள் நீதி மய்யம் பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த நிர்வாகி பகுதி செயலாளர் திரு முபாரக் அலி அவர்கள் அங்கிருந்த ரேஷன் கடையில் காலாவதியான தேயிலைத் தூள் விநியோகம் செய்வதை கண்டறிந்து அங்கே பணியில் இருந்த ஊழியரை கண்டித்தார்.

“பெரியாங்குப்பத்தில் உள்ள ரேஷன் கடை எண் 1ல் காலாவதியான டீதூள் விற்கப்பட்டுள்ளது அதனை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு விசாரித்தபோது கடை சேல்ஸ்மேன் தவறை ஒப்புக் கொண்டு இனிமேல் இந்த தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன் என்று உறுதி அளித்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.