சென்னை ஜூலை 20, 2022

தற்போது நிகழ்ந்து வரும் மாணவர்கள் இடையே உண்டாகும் மன உளைச்சலின் காரணமாக தற்கொலைகள் நடந்து வருகிறது அவர்களின் நம்பிக்கை ஸ்திரத்தன்மை குறைந்து வருகிறதா என யோசிக்கத் தோன்றுகிறது. தேர்வுகளைக் கண்டு பயம் கொள்வது, பிறருடன் தங்களை ஒப்பிட்டு பேசுவது, தங்களது குடும்பச் சூழல் காரணமாக படிப்புகளின் மேல் கவனம் சிதறுவது, அவர்களது பதின்ம வயதிற்குள் உண்டாகக்கூடிய விடலை தனம் கொண்ட நடவடிக்கைகள் மூலமாகவும் கவன சிதறல் ஏற்படுகிறது. பெற்றோர்களின் அதீத கண்டிப்பும் மதிப்பெண்கள் பெறக்கூடிய பிள்ளைகளை மெஷின்களாக நினைப்பதும் கூட தற்கொலைகள் நிகழக் காரணமாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் உயர்தரமாக காட்டிக் கொள்ளும் பள்ளிகள் கல்வி சூழலில் தமது பள்ளிகளை தரம் உயர்த்திக் கட்டிக் கொள்ள தங்களிடம் பயிலும் மாணவர்களை அழுத்தம் தந்து படிக்கச் செய்வதும் தற்கொலைகள் நிகழ்த்த காரணமாக அமைந்து விடுகிற அமைந்து விடுவதும் உண்டு.

மருத்துவம் பயில விரும்பும் மாணவர்கள் தற்போது நீட் தேர்வுகளை கண்டு அஞ்சும் நிலையில் ஏற்படுகிறது நீட் தேர்வு விலக்கு பற்றி பல கருத்துக்கள் உலவிக் கொண்டிருக்கிறது. நமது தமிழகத்தில் கல்வி முறைகளில் கிராமப்புறங்களில் பயிலும் மாணவர்கள் நீட் தேர்வுகளை புரிந்து எழுத இயலாது போவதால் மேலும் நீட் தேர்வுக்கான பயிற்சியை மேற்கொள்ள போதுமான பொருளாதாரச் சூழலும் அவர்களுக்கு இல்லாததால் அச்சத்தின் காரணமாக தங்கள் உயிரைப் போக்கிக் கொள்ளும் எண்ணம் ஏற்பட்டுள்ளது என்றும் அஞ்சத் தோன்றுகிறது.

பல வருடங்களாக இங்கே கோலோச்சி கட்சி நடத்திக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் தங்களின் சமயோசித அரசியலை மாணவர்களின் கல்விகளில் புகுத்தி அவர்களின் உயிர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்களோ என கவலை கொள்ள வைக்கிறது.

இதற்கு என்ன தான் தீர்வாக இருக்க முடியும் ?

இவற்றை இப்படியே கடந்து சென்று விட முடியாது நாளைய தலைமுறை எனும் மாணவர் பருவத்தினர் வளர்ந்து ஆளாகி சாதிக்க வேண்டியன நிறைய உள்ளது நல்ல விதமாக அவர்களை வளர்த்து ஆளாக்க வேண்டிய பொறுப்பும் இச் சமூகத்திற்கு உள்ளது. எனக்கென்ன என் மகன் என் மகள் என்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் தூங்கி விடாமல் நம்மால் இயன்றவற்றை இந்த நாட்டிற்கு சிறிதேனும் செய்து முடிப்போம்.

பிள்ளைகளின் படிப்பில் சற்றேனும் குறைகள் தென்பட்டால் அவற்றை என்ன ஏதென்று கண்டுகொண்டு சரி செய்ய நாம் பெற்றோராய் கடமைப்பட்டுள்ளோம். அதே சமயம் தங்களை நம்பி இருக்கும் மாணவர்களை பாதுகாப்பாய் புத்தி கூர்மையாய் வளரச் செய்து அவர்களுக்கு நல்லதையெல்லாம் கற்பித்து தருவது ஆசிரியர்களின் கடமையும் ஆகும்.

இப்போதெல்லாம் மாணவர்களுக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தல் தற்கொலைகள் என தொடர்ந்து நடந்து வருவதால் வேதனை கொள்ளும் மனம்.

இப்படி மாணவர்கள் இடையே நிலவும் ஸ்திரத்தன்மை அற்ற சூழல்களால் பெருகிவரும் தற்கொலை எண்ணங்களையும் பாலியல் தொல்லைகளையும் மன அழுத்தத்திற்கு உள்ளாகாமல் கல்வியில் இன்ன பிற திறமைகளில் வளர்த்தெடுக்க வேண்டிய வழிமுறைகளை செயல்படுத்த வேண்டி மாணவர்களை அவர்களின் பெற்றோர்களை ஆசிரியர்களை மற்றும் அரசினையும் கேட்டுக்கொள்ளும் நெடிய கடிதம் ஒன்றை எழுதிக் கேட்டுக்கொண்டுள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள்.

தலைவர் அவர்களின் கடிதம் தொடர்பான அறிக்கையை பற்றி நாளிதழ்களில் வெளிவந்துள்ளது.