சென்னை, ஆகஸ்ட் 25, 2022

“ஆரஞ்சுப் பாக்கெட்டிற்கு செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அதைவிட லிட்டருக்கு ரூ.12 அதிகவிலையுள்ள “டீ மேட்” பால்பாக்கெட்டை கட்டாய விற்பனை செய்வதாக ஆவின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிமுக ஆட்சியில் “டீலக்ஸ் பேருந்து”! திமுக ஆட்சியில் “டீ மேட் பால்”?. மக்களின் தலை மீது மறைமுக விலையேற்றும் கழகங்களின் “விஞ்ஞான விலையேற்றத்தை” மக்கள் நீதி மய்யம் கண்டிக்கிறது. அமைச்சரும், அதிகாரிகளும் ஆரஞ்சுப் பாக்கெட் செயற்கைத் தட்டுப்பாட்டை நீக்கவும், “டீ மேட்” பாக்கெட் கட்டாய விற்பனையைத் தடுத்து நிறுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.” – மக்கள் நீதி மய்யம் அறிக்கை

கடந்த அதிமுக ஆட்சியில் சாதாரண பேருந்துகளை கொஞ்சம் போல மாற்றம் செய்துவிட்டு கட்டணத்தை மும்மடங்காக உயர்த்தி வசூல் வேட்டை நடத்தியும் பல முறைகேடுகள் நடந்ததாக கூறப்படுகையில் போக்குவரத்துத்துறை நஷ்டத்தில் இயங்கி வந்தது தெரிந்ததே.

அதே போன்று தற்போதைய திமுக அரசும் ஆவின் நிறுவனத்தின் தயாரிப்பான ஆரஞ்சு பால் பாக்கெட்டினை செயற்கையாக தட்டுப்பாடு உண்டாக்கி முகவர்களுக்கு விநியோகம் செய்கையில் புதிய அறிமுகமான டீ மேட் எனும் பெயரில் கவரின் வண்ணத்தை சற்றே மாற்றிவிட்டு லிட்டருக்கு ரூ.12 என விலையேற்றம் செய்து அதையே முகவர்கள் கண்டிப்பாக வாங்கிச் செல்ல வேண்டும் என்று நிர்பந்திக்கப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. எதற்கு இப்படி ஓர் முரண்பாடான ஓர் விற்பனையை செய்ய ஆவின் நிபந்தனை விதிக்கிறது இதன் மூலம் லிட்டருக்கு கூடுதலாக கிடைக்கப்பெறும் ரூபாய்கள் கணக்கிட்டால் கோடிக்கணக்கில் வந்து நிற்கும். இதனை சற்றும் எதிர்பாராத மக்கள் ஏற்கனவே பல பொருட்களின் அபரிமித விலையேற்றமும் அதன் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்புகளும் மிகுந்த சுமையை தந்து கொண்டிருக்கின்றன, இது போதாது என்று மாநில அரசும் தன் பங்குக்கு இப்படி விலையேற்றம் செய்தால் எப்படி சாதாரண பொதுமக்கள் குடும்பம் நடத்துவார்கள் ?