சென்னை : ஆகஸ்ட் 1௦, 2022

நமது தேசத்தந்தை காந்தியார் விடுதலை வேண்டி அறவழிப்போராட்டத்தை முன்னெடுத்து மக்களை வழிநடத்திச் சென்றது அஹிம்சை மட்டுமே முக்கிய ஆயுதமாக கொண்டிருந்தார். தண்டி யாத்திரையும் அவ்வாறே. அது கிழக்கிந்திய கம்பெனியின் அடிமைத்தன ஆட்சியை தகர்த்தெறிய விடுதலை பெறவேண்டி நடத்தினார்.

இது போலே அதன் பின்னர் வந்த ஆட்சியாளர்கள் ஒவ்வொரு வழியிலும் அவர்களின் கொள்கை கோட்பாடுகளை முழுமையாக கொண்டிராமல் தேவைக்கு வளையும் பொருளைப் போல் ஆட்சியையும் நடத்தியது அறிந்ததே. தற்போது நடந்து வரும் ஆட்சியும் அவ்வாறே தொடர்வது வேதனைக்குரியது.

காந்தியார் தண்டி யாத்திரை துவங்கிய போது 40 பேர் மட்டுமே இருந்தனர் ஆயினும் பின்னர் அவரது எண்ணமறிந்து பல லட்சம் பேர் அவரின் பின்னால் அந்த யாத்திரையில் கலந்து கொண்டனர். அதைப் போல் நானும் தனிப்பட்ட ஓர் சத்தியாகிரகம் கொண்டு நடந்து கொண்டிருக்கிறேன். நீங்களும் அதைப் போன்றே தனிப்பட்ட சத்தியாகிரகம் மேற்கொள்ள வேண்டும் – திரு கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்