கோவை – செப்டெம்பர் 24 – 2022

கோயம்புத்தூர் அன்னூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுகொண்டிருந்த போது எதிர்பாராமல் ஏற்பட்ட மின்வெட்டின் காரணமாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சையளிக்கையில் அப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் மின்வெட்டின் காரணமாக நடந்த இந்தத் துயரச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளக் கோரி பொதுமக்களும் இணைந்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

10×10 அளவில் சிறு வணிகம் செய்திடும் கடைகளில் கூட மின்வெட்டின் போது தடங்கள் ஏற்படா வண்ணம் சமாளிக்க இன்வெர்டர் பாட்டரிகள் வைக்கப்படும் இந்த காலகட்டத்தில் அரசினால் நிர்வகிக்கப்படும் மருத்துவமனையில் போதுமான அளவில் ஜெனரேட்டர் வசதிகள் செய்யப்படாமல் இருப்பது பெரும் அலட்சியப்போக்கினை என்னவென்று சொல்வது ? காக்க வேண்டிய மருத்துவத்துறை உயிர்களை பலிகொடுப்பது எங்கனம் அறமாகும் ?