ஈரோடு – பவானி சாகர், செப்டம்பர் 25, 2022

சமனான பகுதிகளிலே கல்வி கற்பதற்கு போக்குவரத்து இடையூறுகள் உள்ளது. இதில் மலைக் கிராமத்தில் உள்ள பிள்ளைகளின் கல்வி கற்கும் வாய்ப்புகள் மறைமுகமாக மறுக்கப் படுவதாகவே தோன்றுகிறது.

ஏன் இப்படி, இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் பல வகைகளில் பல துறைகளில் சிறந்து விளங்கிய தகவல்கள் உள்ளன. மலை கிராமங்களில் இன்னும் பழம்பெரும் பூர்வீக குடிகள் வசிக்கின்றனர். அவர்களில் பலர் தங்கள் பிள்ளைகள் படித்து பெரிய அளவில் வர வேண்டும் என்று விருப்பம் கொள்கிறார்கள். ஆயினும் அவர்கள் தமது அன்றாட வாழ்வில் பின்னிப் பிணைந்த தமது பூர்விக வசிப்பிடங்களான மலைக் கிராமங்களை விட்டுத் தர தயாரில்லை.

இப்படியே இருந்து கொண்டே நிலையை நம்மால் இயன்ற அளவுக்கு மாற்றித் தர வேண்டும் என்ற எண்ணம் கொண்ட மக்கள் நீதி மய்யம் களத்தில் இறங்கியது.

முதற்கட்டமாக ஈரோடு வடகிழக்கு மாவட்டத்திற்கான பவானி சாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மலைக் கிராமத்தில் ஆய்வைத் துவங்கிய மய்யதினர் மலைக்கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் சிரமம் இடர்பாடுகள் பற்றிய தகவல்கள் கேட்டு அறிந்து கண்டு கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய அவசியம் என்ன என்பதை உணர்த்த வேண்டிய கட்டாயத்தில் நம் மக்கள் நீதி மய்யம் உள்ளது. இங்கு மட்டுமில்லாமல் பல இடங்களில் இது போன்ற ஆய்வுகள் தொடரும் என தெரிவிக்கிறார் மாவட்ட செயலாளர் உட்பட நிர்வாகிகள் பலரும்.

ஈரோடு வடகிழக்கு மாவட்ட செயலாளர் திரு கோபி சிவகுமார் அவர்களின் ஆய்வின் முடிவில் நீங்கள் காண்பது.

“களத்தில் மய்யம்
மக்களோடு மய்யம்
இன்று ஈரோடு வடகிழக்கு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி மலைக்கிராம மக்கள் மற்றும் மாணக்கர்களின் சிரமங்களை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பது பற்றிய ஆய்வு துவங்கியது.
இந்த ஆய்வில் மலைக்கிராமங்களில் கல்வி பயில மாணாக்கர்கள் படும் சிரமங்கள் மற்றும்

இடர்பாடுகள் பற்றி மலைகிராம‌ மக்கள் ‌நம்மிடம் தெரிவித்தனர்.
இந்த ஆய்வு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் திரு.விக்னேஷ் மற்றும் கடம்பூர் ஒன்றிய செயலாளர் திரு.குருநாதன் மற்றும் சிவ மூர்த்தி. விக்னேஷ் உட்பட மய்யத்தினர் பலரும் சென்று மக்களுக்கான சேவையில் பங்கு பெற்றனர்.

இந்த ஆய்வு நமது மய்யத்தின் மூலம் வந்த அறிக்கையின் அடிப்படையில் துவங்கப்பட்டது
இந்த ஆய்வு மேன்மேலும் தொடரும் மலை கிராம் மாணாக்கர்களுக்காக.”

https://twitter.com/maiamofficial/status/1574379844464349185?s=20&t=f7jyc5HOhsX0Bjty4hTvOA