கோவை – செப்டம்பர் 28 – 2022

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே இந்து இளைஞர் முன்னணி அமைப்பைச் சேர்ந்த ஹரிஷ் என்பவரின் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், கல் வீசி சேதப்படுத்தப்பட்டிருந்தது. இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகரளிக்க்ப்பட்டதை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், இக்காரியத்தை செய்தது அதே பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் மற்றும் தமிழ்செல்வன் எனும் இருவர் செய்ததாக தெரிய வந்தது. இதில் விந்தை என்னவென்றால் இச்செயலில் ஈடுபட்ட இருவருமே மேற்குறிப்பிட்ட அதே அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் என்று தெரியவந்தது. சில நாட்களுக்கு முன்பு கொண்டாடப்பட்ட விநாயக சதுர்த்தியின் போது சிலை வைப்பதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்கள் குற்றம் சாட்டப்பட்ட இருவரும். சமீப காலங்களில் நடந்து வரும் சர்ச்சைகளை வைத்து இது போல் நடக்க நேர்ந்தால் நம் மீது எந்த சந்தேகமும் வராது என்று நினைத்து இச்செயலை செய்து இருப்பார்கள் ஆனால் அப்பன் குதிருக்குள் இல்லை என்பதாக விசாரணையில் சிக்கிக் கொண்டனர். இதற்கு முன்னரும் பல சம்பவங்கள் தாங்களாகவே தங்கள் உடைமைகளை சேதம் செய்து விட்டு புகாரளித்து பின் விசாரணையில் மாட்டிக் கொண்டு விழித்து நாம் அனைவரும் அறிந்ததே !

இதல்லவோ போற்றத்தக்க திட்டம் நமக்கு நாமே என்பதோ ?

இதற்கு முன்னர் தாங்களே தங்கள் உடைமைகளை சேதம் அடைந்து விட்டதாக கூறி விசாரணையில் சிக்கிய செய்திகள்.