புது தில்லி அக்டோபர் 11, 2022

தாய்மொழியை உயிராகமதிக்கும் பலமாநிலங்கள் இந்தியாவில் உண்டு. அதில் தமிழகத்திற்கு தனிச்சிறப்பு பற்றி நாம் சொல்லி தான் தெரிய வேண்டியதில்லை. மண், பெண், பொருள், கௌரவம் என பல விடயங்களுக்கு போர்கள் நடந்ததுண்டு. அவை பல நாட்கள் காலம் நீடித்த வரலாறு நாம் அறியலாம்.

மொழிக்காக போர் நடத்திய பெருமை தமிழகத்திற்கு உண்டு. பல தியாகிகள் அதற்கென போராடிய வரலாறும் தங்கள் சொத்துக்களை உடைமைகளை இழந்து இறுதியாக தம் உயிரையும் தியாகம் செய்தது மறுக்க முடியாத உண்மை.

2019 இல் இந்தி மொழியை திணிக்கும் முயற்சியில் இறங்கியது மத்திய அரசு அதனை எதிர்த்து பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்கள்

ஓர் மொழியை அதன் பாரம்பரியத்தை வரலாற்றை காலம் காலமாக பேசப்பட்டும் எழுதப்பட்டும் முன்னெடுத்து வரும் ஓர் அடையாளத்தை அதன் தனித்துவத்தை சிதைக்கும் எண்ணமே இந்த மொழித் திணிப்பு. ஒரே நாடு ஒரே மொழி என்பது ஜனநாயகமற்ற விரோத போக்காகும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு திகழ்ந்துவரும் இவ்வேளையில் அனைத்து இடங்களிலும் ஒரே மொழியை புகுத்த செய்வது எந்த விதத்திலும் அறமாகாது. பன்மொழிப் புலமைகள் கொண்ட பல அறிஞர்கள் இங்கே வாழ்ந்து சென்று இருக்கிறார்கள். தொன்மையான மொழிகளை வரும் சந்ததியினர் அனைவரும் தெரிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் வேண்டும் என்பதற்காக தங்களது வாழ்நாளில் பெரும் பகுதியை மொழியின் வளர்ச்சிக்காகவும் செலவழித்தார்கள். மொழியின் வரிவடிவத்தினை அறிந்து கொள்ள ஒவ்வொரு இடமாக பயணித்தார்கள் கல்வெட்டுகளில் ஓலைச்சுவடிகளில் பண்டைய முறைகளில் எந்த வடிவத்தில் இருந்தாலும் அவற்றை மீட்டெடுத்து புதுப்பித்து அச்சிட்டு நமக்கு காப்பாற்றி தந்தார்கள். அப்படி அரும்பாடு பட்டு வந்த மொழிகளில் தொன்மையானதும் முதன்மையானதும் தமிழ் மொழியாகும்.

செம்மொழி அந்தஸ்து பெற்ற பல மொழிகள் இங்கே உள்ளது. அதன் அடையாளங்கள் மிக நீண்ட நெடிய வரலாற்றை உடையது.

இப்படி பல வரலாற்று உண்மைகள் இந்தியாவில் பேசப்படும் மற்ற சில மொழிகளுக்கும் உண்டு. ஆயினும் ஆளும் மத்திய பாஜக அரசு தொடர்ந்து இந்தி மொழியினை நிர்மாணிக்க வழிவகைகளை செய்து கொண்டிருக்கிறது. உள்ளாட்சி துறை அமைச்சரான அமித்ஷா மற்றும் குழுவினரின் ஆட்சி மொழி நாடாளுமன்ற நிலை குழு ஆய்வு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருக்கிறது. அதில் காணப்படுவது மட்டுமில்லாமல் எந்தத் துறைகளை எடுத்துக் கொண்டாலும் இந்தி மொழியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தை அழுத்தமாக வைத்துள்ளது. அதாவது கல்வி கற்றுக் கொள்வது முதல் அரசு துறைகளில் பணி புரிவது வரை எங்கும் இந்தி மொழி மட்டுமே இருக்கப் பட வேண்டும் என்பதாய் அடங்கிய அறிக்கை ஒன்றை கடந்த மாதம் பதினோராம் தேதி அன்று ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களிடம் அளிக்கப்பட்டது.

கேந்திரிய வித்யாலயா நவோதயா வித்யாலயா மத்திய பல்கலைக்கழகங்கள் தொழில்நுட்பக் கழகங்கள் ஐஐடி ஐஐஎம் போன்ற மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் இந்தி மொழியை கட்டாயம் பயிற்று மொழியாக்கப்பட வேண்டும் என அப்பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆங்கில மொழியை பயன்படுத்தும் இடங்களிலும் அதை படிப்படியாக ஒழித்து விட்டு இந்தி மொழியை அமல்படுத்த வேண்டும் பணியாளர் தேர்வுக்கான வினாத்தாளை ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியில் தயாரிக்க வேண்டும் அரசு பணிகளில் சேர இந்தி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் இங்கே பயன்படுத்தாத அரசு அதிகாரிகளை எச்சரிக்க வேண்டும் என்றெல்லாம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதுபோல் ஹிந்தியை திணிக்கும் வகையில் 100க்கும் மேற்பட்ட பரிந்துரைகளை அக்குழு சமர்ப்பித்துள்ளது இது இந்தி பேசாத மாநிலங்களுக்கும் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு இனம் மதம் மொழி பண்பாடு என பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் அடி வேரான வேற்றுமையில் ஒற்றுமையை அளித்து ஒரே நாடு மொழி மதம் உணவு கலாச்சாரத்தை நிறுவ மத்திய அரசு தொடர்ந்து செயல்படுவது தேசிய ஒருமைப்பாட்டை சிதைத்து விடும்.

2014 இல் ஆட்சிக்கு வரும்போது கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றாமல் கொஞ்சமும் மக்களின் மீது அக்கறை இல்லாமல் கட்டுக்கடங்காமல் போயிருக்கும் விலைவாசி உயர்வு பொருளாதாரச் சரிவு வேலையின்மை அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை மறக்கச் செய்யும்படி மொழியை பயன்படுத்துகிறது பாஜக அரசு மக்களை பிரிக்கும் முயற்சிகளை கைவிட்டு கொஞ்சம் பொதுநலனும் அக்கறை காட்டுங்கள் மத்திய அமைச்சர்களே !