புது தில்லி – செப்டெம்பர், 23 2022
மக்களுக்காக செயல்படும் அரசின் பல துறைகளும் எந்த வித ஒளிவுமறைவின்றி அதன் நிர்வாகமும், செயல்பாடுகளும் வெளிப்படையாக தெரியும் வசதி வாய்ப்புகள் இருக்கும் என்றால் அதனால் கிடைக்கபெறும் சேவைகள் மிகத் துரிதமாகவும் சிறப்பாகவும் சென்று சேரும். அப்படி நாட்டில் இயங்கும் முக்கிய துறைகளில் ஒன்றான நீதித்துறை.
- உரிமையியல்
- மாவட்ட முன்சீப் (முதற்கட்டம்)
- சார்பு நீதிபதி
- மாவட்ட நீதிபதி (முதன்மை, முறையீடு, மறுவிசாரணை)
- குற்றவியல்
- நீதிமுறைமை நடுவர் (முதற்கட்டம்)
- உதவி செசன்சு நீதிபதி
- தலைமை நீதிமுறைமை நடுவர்
- செசன்சு நீதிபதி (முதன்மை,முறையீடு,மறுவிசாரணை)
- மாநில உயர்நீதிமன்றம்
- உச்ச நீதிமன்றம்
இங்கே ஒவ்வொரு நீதிமன்றத்திலும் பல வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் அவைகளின் தன்மை, குற்றச்சாட்டுகளின் மூலம் பல கட்டங்களாக நகர்ந்து செல்லும் வழக்குகள் எந்த ஒளிவுமறைவின்றி தொடர்ந்து நடந்து என்றால் அதன் உண்மைத்தன்மையை மக்கள் உணர்ந்து கொள்வார்கள். நீதிமன்றங்களின் மேல் மக்களுக்கு இருக்கும் அசையாத நம்பிக்கையை இன்னும் அதிகமாகும் அப்படி அங்கே வாதிடப்படும் அமர்வுகள் நேரலையாக காணக்கிடைக்கும் என்றால் நீதித்துறை இன்னும் பலம் பெரும்.
இதற்கு முன்னதாக உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் அமர்வுகள் நேரலையாக வெளியாக வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. தற்போது அமர்வுகள் நேரலை செய்யப்படும் என்ற அறிவிப்பினை உளமார வரவேற்கிறது மய்யம்.
உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வானது நேரலை செய்யப்பட இருப்பது வரவேற்புக்குரியது. மனுதாரர் தொடங்கி வழக்கறிஞர்கள்,சட்டக்கல்லூரி மாணவர்கள்,பத்திரிகையாளர்கள், பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பலனிக்கும் நகர்வு இது. வெளிப்படைத்தன்மைதான் நீதிமன்ற நடவடிக்கைகளை மேம்படுத்தும் என்ற அடிப்படையில், நாட்டிலுள்ள அனைத்து நீதிமன்றங்களும் ஒளிபரப்பிற்கு உகுந்த அனைத்து வழக்குகளையும் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான முயற்சிகளை படிப்படியாக முன்னெடுக்க வேண்டும்.