சென்னை : ஜனவரி 14, 2023

உழவர்கள் போற்றும் பொங்கல் திருவிழா வெகு விமரிசையாக வேறு வேறு பெயர்களில் பல மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. இது காலம்காலமாக நடந்து வருவதும் தெரிந்ததே.

பாரத ஸ்டேட் வங்கியில் கிளார்க் பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு ஜன.15-ம் தேதியன்று நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளாகவும், பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களிலும் பண்டிகை கொண்டாடப்படும் தினத்தன்று தேர்வு நடத்துவது ஏற்கத்தக்கதல்ல.

தமிழர்களின் மிக முக்கியப் பண்டிகையான பொங்கல் தினத்தன்று நடத்தப்படவுள்ள வங்கித் தேர்வுக்கான தேதியை மாற்ற வேண்டுமென்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கைவிடுத்தும், எஸ்பிஐ வங்கி நிர்வாகம் அதை ஏற்க மறுப்பது கண்டனத்துக்குரியது. – மக்கள் நீதி மய்யம்