கேரளா : ஜனவரி 2௦, 2௦23

பால்ய கால கல்வி முதல் கல்லூரி கல்வி வரை கனவுகள் பல உண்டு. ஆசிரியர், பொறியாளர், ஐ.எ.எஸ், ஐ.பி.எஸ், மருத்துவர் என்ற பதவிகளுக்கு படித்து அவற்றில் ஏதாவது ஒன்றை நினைவாக்க யோசிப்பார்கள். ஆயினும் அரசியல்வாதி ஆகிட யாரோ ஓரிருவர் மட்டுமே முயற்சிப்பார்கள் அதிலும் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் பிரபலமான கட்சிகளில் இருக்கும் அரசியல் பெரும்புள்ளிகளின் மகன்கள் கட்சிப்பணிகளில் ஈடுபடுத்தி அடுத்த கட்டங்களுக்கு கொண்டு முன்னிறுத்தி வருவார்கள் அவர்களை மீறி வேறு எந்த இளைஞர்கள் வந்தாலும் அவர்கள் மிக சிரமம் கொண்டே அடுத்த கட்டங்களுக்கு நகரமுடியும். வாரிசுகள் அரசியல் பதவிகளில் கோலோச்சுவது பல வேளைகளில் மிகச் சுலபமாக நடந்துவிடும்.

பிற தொழில்நுட்பங்களில் உள்ள பணியிடங்களுக்கு கல்வியறிவு மிகவும் முக்கியம். இன்னும் சொல்லப்போனால் அனுபவ அறிவும் அரசியலில் மிக முக்கியமே என்றாலும் கல்வியறிவும் அந்த அனுபவ அறிவுடன் இணையும்போது மக்களுக்கு நன்மை பயக்கும் அரசியல் அங்கே உண்டாகும். எதிர்கால வளர்ச்சியில் இடையூறுகள் எதுவுமின்றி ஆட்சியை செய்ய இளம்தலைமுறையினர் அரசியலில் வருவது ஆரோக்கியமானது என்பதாக பல இடங்களில் மக்கள் நீதி மய்யம் நிறுவனத் தலைவரான திரு கமல்ஹாசன் அவர்கள் பேசிவருவது குறிப்பிடத்தக்கது.

அதே போன்று கடந்த 15 ஆம் தேதியன்று கோழிகோட்டில் நடைபெற்ற கேரள இலக்கியத் திருவிழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று உரையாற்றினார். அங்கே நிகழ்த்திய உரையில் கவனிக்கத்தக்க பல அற்புதமான கருத்துக்களை அங்கே வந்திருந்த அனைவரும் அறிந்துகொள்ள வைத்தது மிகச் சிறந்த நிகழ்வாகும். உரையாடல்களின் தொகுப்புகளை இந்தப் பதிவில் நீங்கள் காணலாம் கேட்கலாம்.

https://t.co/2M06ljWjx2