சென்னை : பிப்ரவரி 12, 2௦23

இயக்குனர் பா. ரஞ்சித் அவர்களின் புத்தக வெளியீடு மற்றும் விற்பனை நிலையம் சென்னை எழும்பூரில் அமைக்கப்பட்டுள்ளது. அதனை திறந்து வைக்க மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களை நேரில் சென்று அழைத்தார் இயக்குனர் பா.ரஞ்சித்.

எழுத்தாளர்கள் மற்றும் புத்தகங்களின் பால் தீராத அன்பும், படிக்கும் ஆவலும் அதை பிறருக்கு பரிந்துரை செய்யும் பேராவலும் கொண்ட தலைவரும் அவரது அழைப்பினை ஏற்று இன்று புத்தக அரங்கினை திறந்து வைத்துப் பேசினார்.

“நாம் உருவாக்கியது தான் அரசியல்,மக்களுக்கானது தான் அரசியல் அதை திருப்பி போட்டு தலைகீழாக பிடித்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆளும் கட்சி, ஆள்பவர்கள் என்னும் வார்த்தை இனி வரக்கூடாது, நாம் நியமித்தவர்கள் அவர்கள் என்னும் எண்ணம் மக்களுக்கு வரும் பட்சத்தில் ஜனநாயகம் நீடூழி வாழும். – திரு கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

https://www.youtube.com/live/RWEclJiCTrw?feature=share

அரசியல் ஒதுக்கி வைக்காதீர்கள் : அதைப் புரிந்து கொள்ளுங்கள்