சென்னை : பிப்ரவரி 21, 2௦23

கடந்த 2018 ஆம் ஆண்டில் மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி திரு அப்துல் கலாம் அவர்களின் ராமேஸ்வரம் இல்லத்தில் இருந்து துவங்கினார் அதற்கு மக்கள் நீதி மய்யம் எனும் பெயரிட்டார். சாதியையும் மதத்தையும் தள்ளி வையுங்கள் மனிதத்தையும் தேச நலனையும் ஒருங்கே வையுங்கள். நாங்கள் இடமும் இல்லை வலமும் இல்லை மய்யத்தில் இருப்போம் என்றார்.

சரி மய்யம் என்றால் அப்படியும் செல்லாமல் இப்படியும் செல்லாமல் நடுவிலே பயணம் செல்வதல்ல, மாறாக மக்களுக்கு நன்மை பயக்கும் எனில் திட்டம் நிறைவேற்றலாம் அப்படி இல்லாமல் திட்டம் தீமை தரும் இழப்புகளை உண்டாக்கும் என்றால் அதை கிஞ்சித்தும் யோசிக்காமல் அதனால் எந்த சிரமும் நிர்வாகத்திற்கு ஏற்பட்டால் கூட எந்தக் கவலையும் இல்லை அந்த திட்டத்தை புறக்கணிப்போம் என்ற கோட்பாடே மய்யம் என்பதாகும்.

ஆரம்பித்த துடிப்புக் குறையாமல், ஐந்து ஆண்டுகளைக் கடந்திருக்கிறது #MakkalNeedhiMaiam . ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம். உள்ளத்தில் எரியும் அறத்தழல் ஒளி குன்றாமல் பார்த்துக்கொள்வோமாக. மநீம உறவுகள், நற்பணி இயக்க நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.திரு கமல்ஹாசன், தலைவர், மக்கள் நீதி மய்யம்

ஐந்து ஆண்டுகால அனுபவத்துடன்..!! நான்கு தேர்தல் தோல்விகளுடன்..!! குறைந்த எண்ணிக்கையுடன்..!! எண்ணற்ற கனவுகளுடன்..!! வலிமையான நோக்கத்துடன்..!! ஆறாம் ஆண்டில் நேர்மையுடன் அடியெடுத்து வைக்கிறோம் – கோவை மண்டலம்,(தகவல் & தொழில்நுட்ப பிரிவு) மக்கள் நீதி மய்யம்