சென்னை : மார்ச் 27, 2௦23

ஆறாம் ஆண்டில் வீறு நடை போட்டுகொண்டிருக்கும் மக்கள் நீதி மய்யம் வருகின்ற 2௦24 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பங்குகொள்ளும் வகையில் சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய பாராளுமன்ற தொகுதிவாரியாக பூத் கமிட்டி அமைப்பது மற்றும் நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்தும் செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்தும் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் ஒப்புதலோடு ஆலோசனைகள் படியும் கட்சியின் துணைத்தலைவர், பொதுச்செயலாளர், மாநில செயலாளர், மாநில இணைச் செயலாளர் ஆகியோர் முன்னிலையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேரவாரியாக சிறப்பாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாவட்ட நிர்வாகிகளுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கியும் அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் தலைவரின் எண்ணங்கள் மற்றும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களின் தகவல்கள் மற்றும் புகைப்படத் தொகுப்புகள் அடுத்து வருவன :

வரும் 2௦24 ஆண்டு நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் பூத் கமிட்டி அமைக்க வேண்டி குறித்த ஆலோசனை கூட்டம் பொதுச்செயலாளர் திரு.அருணாச்சலம் தலைமையில் சைதாபேட்டை & வேளச்சேரி மாவட்ட செயலாளர் திருமதி சினேகா மோகன்தாஸ் மற்றும் நிர்வாகிகளுடன் 26.௦3.2௦23 அன்று தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டிகளை அமைக்கும் ஆலோசனைக்கூட்டம் பொதுச்செயலாளர் திரு. அருணாச்சலம் தலைமையில், சைதை & வேளச்சேரி தொகுதிகளுக்கு மா.செ. திருமதி. சினேகா மோகன்தாஸ் & நிர்வாகிகளுடன் 26.03.2023 அன்று மக்கள் நீதி மய்யம் HQ வில் நடைபெற்றது. – ம.நீ.ம

பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டிகளை அமைப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் பொதுச்செயலாளர் திரு.அருணாச்சலம் தலைமையில், பல்லாவரம், ஆலந்தூர், கே.கே நகர், இராயபுரம், கொளத்தூர், வில்லிவாக்கம், ஆயிரம் விளக்கு, தி.நகர் தொகுதிக்குகளுக்கு 26.03.2023 அன்று தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில செயலாளர் திரு. சிவ இளங்கோ முன்னிலையில் மாவட்ட செயலாளர்கள் திரு. M.P. உதயச்சந்திரன், திரு. மாறன், திரு. கமல் கோமகன் மற்றும் நிர்வாகிகளுடன் நடைபெற்றது.

பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டிகளை அமைப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் பொதுச்செயலாளர் திரு. அருணாச்சலம் தலைமையில், மதுரவாயில் & ஶ்ரீபெரும்புதூர் தொகுதிக்குகளுக்கு 26.3.2023 அன்று தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில செயலாளர் திரு. சிவ இளங்கோ மாவட்ட செயலாளர்கள் திரு. பாசில், திரு. D.கண்ணன் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து கொண்டனர்.

பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டிகளை அமைக்கும் ஆலோசனைக்கூட்டம் பொதுச்செயலாளர் திரு. அருணாச்சலம் தலைமையில், சோழிங்கநல்லூர் & அம்பத்தூர் தொகுதிகளுக்கு 26.03.2023 அன்று மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில செயலாளர் திரு. சிவ இளங்கோ முன்னிலையில் மாவட்ட செயலாளர்கள் திரு. பிரவின் மார்கஸ், திரு. தனபாலன் & நிர்வாகிகளுடன் கலந்து கொண்டனர்.

பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டிகளை அமைக்கும் ஆலோசனைக்கூட்டம் பொதுச்செயலாளர் திரு. அருணாச்சலம் தலைமையில், திருவொற்றியூர் தொகுதிக்கு மாவட்ட செயலாளர் திரு. S.D.மோகன் & நிர்வாகிகளுடன், மாநில செயலாளர் திரு சிவ இளங்கோ முன்னிலையில் 26.03.2023 அன்று தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டிகளை அமைக்கும் ஆலோசனைக்கூட்டம் பொதுச்செயலாளர் திரு. அருணச்சாலம் தலைமையில், துறைமுகம், எழும்பூர் & தாம்பரம் தொகுதிகளுக்கு 26.03.2023 அன்று மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில செயலாளர் திரு சிவ இளங்கோ மற்றும் மாநில இணைச்செயலாளர் திரு ஜெயகணேஷ் ஆகியோருடன் மாவட்ட செயலாளர் திரு.S.வசந்த் சிங், தாம்பரம் துணை மாவட்ட செயலாளர் திரு.கெவின் & நிர்வாகிகளுடன் கலந்து கொண்டனர்.

பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டிகளை அமைப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் பொதுச்செயலாளர் திரு. அருணாச்சலம் தலைமையில், திரு.வி.க.நகர் & பெரம்பூர் தொகுதிகளுக்கு மா.செ. திரு .V.உதயகுமார் & நிர்வாகிகளுடன் 26.3.2023 அன்று தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் துணைத்தலைவர் திரு தங்கவேலு முன்னிலையில் மற்றும் மாநில செயலாளர் திரு சிவ இளங்கோ & மாநில இணைச்செயலாளர் திரு ஜெயகணேஷ் அங்கம்வகிக்க கூட்டம்‌ நடைபெற்றது.

பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டிகளை அமைப்பது ஆலோசனைக்கூட்டம் பொதுச்செயலாளர் திரு. அருணாச்சலம் தலைமையில், துணைத்தலைவர் திரு தங்கவேலு, முன்னிலையில் மாநில செயலாளர் திரு சிவ இளங்கோ & மாநில இணைச்செயலாளர் திரு ஜெய்கணேஷ் உடனிருக்க அண்ணாநகர் & விருகம்பாக்கம் தொகுதிகளுக்கு மா.செ. திரு. சண்முகம் & நிர்வாகிகளுடன் 26.03.2023 அன்று தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டிகளை அமைக்கும் ஆலோசனைக்கூட்டம் பொதுச்செயலாளர் திரு. அருணாச்சலம் தலைமையில், மாநில செயலாளர் & மாநில இணைச் செயலாளர்களான திரு சிவ இளங்கோ & திரு ஜெய்கணேஷ் ஆகியோர் முன்னிலையில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி & மயிலாப்பூர் மா.செ திரு.ஓம் பிரகாஷ் & நிர்வாகிகளுடன் 26.03.2023 அன்று மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.