மதுரை : மார்ச் 28, 2023

மக்கள் நீதி மய்யத்தின் 6வது ஆண்டு துவக்கம் மற்றும் 300 நபர்கள் மய்யத்தில் இணையும் விழா, மதுரை பெத்தானியாபுரத்தில் 26.03.2023 மாலையில் நடைபெற்றது.

மாவட்ட துணைச் செயலாளர் சரவணன் தலைமை தாங்க, மாநிலத் துணைத் தலைவர்கள் திரு. A.G.மௌரியா, திரு. தங்கவேலு, இளைஞர் அணி மாநில செயலாளர் திரு கவிஞர் சிநேகன், நற்பணி இயக்க அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு நாகராஜன், விவசாயி அணி மாநில செயலாளர் திரு .G.மயில்சாமி, மண்டல செயலாளர் திரு.M.அழகர், முன்னாள் மாவட்ட செயலாளர் திரு V.முனியசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். விழாவில் மய்ய நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.