ஆத்தூர் : ஏப்ரல் ௦3, 2௦23

குடியரசு நாளன்று நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தின் போது மக்கள் நீதி மய்யம் சேலம் மாவட்ட அமைப்பாளர் (தகவல் தொழில்நுட்ப அணி) திரு ஆஷிக் அவர்கள் கலந்து கொண்டு அப்பகுதியில் தேங்கியுள்ள பல பணிகள் குறித்து ஊர்த்தலைவரிடம் முறையிட்டார். அதன் தொடர்ச்சியாக தற்போது சாலை வசதி செய்துதரும் வகையில் அதற்கான பணிகளை ஊர்த்தலைவர் மூலம் நிர்வாகம் துவங்கியுள்ளது. மய்யம் நிர்வாகியின் முன்னெடுப்பு குறித்து மிகுந்த மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவிப்பதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

மக்கள் நீதி மய்யத்திற்கு கிடைத்த அடுத்த வெற்றி 26.௦1.2023 அன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் நம் (மக்கள் நீதி மய்யம்) கட்சியின் சார்பாக நான் கலந்து கொண்டு என் பகுதியில் உள்ள அடிப்படை வசதியை வேண்டுமெனவும் சாலை வசதி வேண்டுமெனவும் ஊர் தலைவரிடம் கோரிக்கையை விடுத்தேன். அதன்படி இன்று சாலை போடும் பணியை தொடங்கியுள்ளார்கள்‌…இது நம்மவரின் வெற்றி… என்றும் மக்கள் பணியில் நம்மவர் உடன் இணைந்து நானும்… நாளை நமதே… – ஆஷிக், மாவட்ட அமைப்பாளர், ம.நீ.ம சேலம்