கோவை : ஏப்ரல் ௦4, 2023

மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (ஏப்ரல் ௦3) ஆட்சியர் உயர்திரு கிராந்தி குமார் பாடி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு தங்கள் தரப்பு கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். இதில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளும் கலந்து கொண்டு தங்கள் வசித்து வரும் பகுதியையொட்டிய கோவை டவுன்ஹால் மணிகூண்டு அருகில் உள்ள மாநகராட்சி கார் பார்க்கிங் பகுதியில் உள்ள ஓர் சிறிய அறையில் தற்காலிகமாக இயங்கிவருவதாக சொல்லப்படும் ரேஷன் கடையில் சுமார் 15௦௦ குடும்ப அட்டைதாரர்கள் கொண்ட அந்தக் கிளை பில் போடுபவர் மற்றும் பொருட்களை அளந்து போடுபவர் என இவருக்கே போதாத நிலையில் மூட்டைகள் அடுக்க முடியாமல் மிகுந்த சிரமம் ஏற்படுவது குறித்தும் ஆட்சியரிடம் விளக்கிக் கூறிய மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் இது குறித்து மனுவை அளித்தனர். மேலும் சிறிய அளவில் செயல்படும் ரேஷன் கடையை போதுமான அளவில் பொருட்கள் இருப்பில் வைத்துக் கொள்ளவும் வகையில் கூடிய ஓர் பொருத்தமான கடைக்கு மாற்றித் தர வேண்டியும் மேற்குறிப்பிட்ட மனுவில் மக்கள் நீதி மய்யம் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.