ஏப்ரல் 17, 2024 (Updated 19.04.2024)

தேதி அறிவிக்கப்பட்டவுடன் பரபரப்பு தொற்றிக்கொள்ள பல கட்சிகளும் களத்தில் இறங்கின. மும்முரமாக பிரச்சாரங்களை துவங்கி ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி தெளித்து வந்தன. அவற்றில் எது சரியென, அவற்றில் எதை நிறைவேற்ற சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதையும் தீர ஆராய்ந்து வாக்களிப்பது நமது கடமை. குறிப்பாக நீங்கள் கவனிக்க வேண்டியது சாதியோ, மதமோ முக்கியம் என சொல்லும் கட்சிகள் அதனை சார்ந்த கூட்டணி கட்சிகள் மற்றும் அமைப்புகள் என எவற்றையும் சுலபமாக மறுக்கலாம் அதில் எந்த தவறும் இல்லை. மதத்தை முன்னிலைபடுத்தி அரசியலில் ஆட்சியில் புகுத்திய பல நாடுகள் பெரும் சிக்கலில் உள்ளாகி சிதைந்து நின்ற வரலாறுகள் உண்டு. சகோதரத்துவம், சமத்துவம், மதச்சார்பற்ற அணுகுமுறை, தனிப்பட்ட நபரின் வாழ்வியல் சுதந்திரம் அதில் மத்திய மாநில அரசுகள் ஒருபோதும் தலையிட எந்த உரிமையும் கிடையாது. உண்ணுவது, உடையணிவது, திருமணம், கருத்தியல் என எதிலும் ஆளும் அரசுகளும் சரி வேறு எந்த அமைப்புகளும் தங்களின் மூக்கை நுழைப்பது கிஞ்சித்தும் ஒப்புக்கொள்ள முடியாத ஒன்று. ஒருவேளை தலையீடு உள்ளதென்றால் அதனை சகித்துக்கொள்ளவும் வேண்டியதில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக சிறந்த கட்டமைப்பு, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, மருத்துவம், கல்வி, பெண்களின் பாதுகாப்பு, நீர் மேலாண்மை, இயற்கை பேரிடர்களை திறம்பட கையாளுதல், முறையான வங்கி சேவைகள், தெளிவான நேர்மையான அரசு நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள் நிர்வாகம் என பல வழிகளில் சிறப்பான ஆட்சியைத் தரவல்ல கட்சியை/கூட்டணியை ஆதரவளித்து வெற்றி பெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

எனவே வாக்களிக்க தேவையான தகுதியை கொண்ட ஒவ்வொரு வாக்காளரும் தவறாமல் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றுமாறு மக்கள் நீதி மய்யம் கேட்டுக் கொள்கிறது.

“நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நம் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர், நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்கள், திமுக மற்றும் அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுக்கான 2024 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரை ஈரோட்டில் துவங்கி, நேற்று கோயம்புத்தூர் ராஜவீதியில் மிகச்சிறப்பாக நிறைவடைந்தது. தேர்தல் பயணத்துக்கு முந்தையக் கூட்டத்தில் தலைவர் கூறியது போல, சென்ற இடமெல்லாம் மக்களின் அன்பும் ஆதரவும் நம்மை நெகிழச்செய்தது. நம் வருங்கால இந்தியாவை கட்டமைக்கும் பொறுப்பு நம் ஒவ்வொருவர் முன்னும் விதைக்கப்பட்டிருக்கிறது என்ற தலைவரின் கூற்றை கருத்தில் கொண்டு, தலைவர் வழிநின்ற மக்கள் நீதி மய்யத் தொண்டர்கள் ஒவ்வொருவரும், துளியும் சுயநலமின்றி தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் தலைவரின் கருத்தை கொண்டு சேர்த்தனர். தேசம் தலைநிமிர வரும் வாக்குப்பதிவு நாளில் (19.04.2024) தவறாமல் வாக்களிப்போம்.”

நாளை நமதே !

நன்றி : மக்கள் நீதி மய்யம்


#KamalHaasan
#MakkalNeedhiMaiam #Election2024