சென்னை ” ஏப்ரல் 19, 2024

மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள் தேர்தல் நாளன்று தனது வாக்கினை செலுத்துவதில் இருந்து கடமை தவறியதில்லை. படப்பிற்கென அயல்நாடுகளுக்கு சென்றிருந்தாலும் வாக்குப்பதிவன்று நிச்சயம் ஆஜராகி வாக்கினை செலுத்து தமது கடமையை நிறைவு செய்வார். அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு ஆண்டும் இந்திய தேர்தல் ஆணையம் புதிய வாக்காளர்கள் சேர்க்கை, முகவரி மாற்றம் போன்றவைகளை செய்திட தேவையான கால அவகாசம் தருவார்கள். அது குறித்த அறிவிப்பினை தானும் பொதுமக்களுக்கு தெரிவிப்பார். மேலும் தேர்தல் நடைபெறவிருக்கும் நேரங்களில் அதற்கு முன்னதாக தங்களது வாக்காளர் அடையாள அட்டையை புதுப்பித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தேசிய வாக்காளர் தினம் அன்று கானொளியில் தோன்றி பொதுமக்களிடம் இன்றைக்கு என்ன நாள் என்றும் குறிப்பிட்டு பேசி, வாக்களிப்பதன் கடமை என்னவென்பதையும், வாக்களிக்காமல் இருப்பது பெருங்குற்றம் என்றும் ஆலோசனை அளிப்பார். மேலும் பதினெட்டு பூர்த்தியானால் முறையாக தத்தமது பகுதிகளில் உள்ள தேர்தல் அலுவலகம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவு செய்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்வார்.

கொடிபிடித்து கோஷம் எழுப்பும் போராட்டங்கள் எதுவும் எதையும் அவ்வளவு எளிதாக மாற்றிவிடாது எனவும் கருதுபவர். ஆயினும் எந்த இடர்கள் என்றாலும் அதனை சட்டபூர்வமாக மட்டுமே சந்திக்க வேண்டும் அதன் மூலமே நமக்கான சமதர்ம நீதியை பெற முடியும் என்றும் அடிக்கடி சொல்வார்.

இந்தியாவின் பிரபல திரைக்கலைஞராக இருந்தாலும் வாக்களிப்பதன் அவசியம் உணர்த்தும் நம்மவர் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் இன்றைக்கு நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும் தனக்கான வாக்கினை தேனாம்பேட்டையில் உள்ள தேர்தல் வாக்கு மையத்தில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று செலுத்தினார். வாக்குச்சாவடியினுள் அமையப்பெற்ற வாக்கு இயந்திரத்தினை முழுமையாக பார்வையிட்டு வாக்கினை செலுத்திவிட்டு செலுத்தியபின் உண்டாகும் பீப் ஒலி ஒலித்ததை உறுதிசெய்துகொண்டு பின்னர் அங்கிருந்து வெளியேறினார்.

https://twitter.com/nammavar11/status/1781185093480198538