வேளாண்மை இல்லையேல் இந்த உலகம் இல்லை அதன் மனிதர்கள் இல்லை. மண்ணின் மீது விளையும் எல்லாம் மனிதன் முதற்கொண்டு வியாபித்திருக்கும் ஒவ்வொரு உயிருக்கும் உணவாக மாறிடும் இது விந்தை அல்ல இயற்கையின் நியதி.

தொன்று தொட்டு காலம் முதலே மனிதனுக்கு விவசாயம் பற்றிய அறிதலும் புரிதலும் வந்தபிறகு அதில் பல்வேறு புதுமைகள் புகுத்தப்பட்டு வந்தது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டு அதனை பொருளாதார வசதியில் செழிப்பாக இருந்த விவசாயிகள் உபயோகபடுத்தினர். இது தவிர்த்து பல்வேறு வகையான இயற்கையான உரங்களை உருவாக்கி அதனை பயன்படுத்தி வந்தநிலையில் மகசூல் அதிகரிக்கவும் பயிரிட்டு பின்னர் அறுவடை காலம் குறுகிடும் வகையில் ரசாயன தாக்கம் நிறைந்த உரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு அதனை சந்தைப்படுத்துதல் என அடுத்தடுத்த கட்டங்களில் முன்னேறியது விவசாயம்.

எனினும் இவற்றை எல்லாம் மிஞ்சும் விதமாக விவசாயம் பல வருடங்களாக இயற்கைச்சூழல் மூலமும் செயற்கையாக உருவெடுத்த இடைத்தரகர்கள் மூலமாகவும் நசிவடையத் தொடங்கியது வேதனைக்குரியது. மழைக்காலங்கள் பொய்ப்பதும் அல்லது அதற்கு மாறாக வேறு காலங்களில் அளவிற்கதிகமாக பொழிந்து வெள்ளமாக உருவெடுத்து பயிரிட்ட வேளாண்மை பாதிப்பிற்குள்ளாவது, அப்படியே இருந்தாலும் விளைச்சல் முடிந்து அறுவடை செய்தபின்னர் கொள்முதல் செய்யப்பட்டு சந்தையை அடைவதிலும் பல சிக்கல்கள் சந்தித்து வருகின்றனர் விவசாய பெருமக்கள்.

சுண்டைக்காய் கால் பணம் சுமைகூலி முக்கால் பணம் எனும் பழமொழியைப் போல பயிரிட்டு வளர்க்க செய்த அசல் செலவுகள் கூட கைக்கு வராமல் நட்டத்திற்கு தருவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. இவை எல்லாம் கடந்து தற்போது நாட்டின் வளர்ச்சி பொருளாதார வளர்ச்சி என்ற கோட்பாடுகளின் வழியாக பல திட்டங்கள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு வருகின்றன அதில் பல திட்டங்கள் விளைநிலங்கள் உள்ள பகுதிகளில் அறிவித்திருப்பது இன்னமும் கொடுமை. இது வேலியே பயிரை மேய்வது என்பது போலாகிறது.

மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அதற்கான நிலங்களை அரசு கையகப்படுத்தி வருவதும் அதற்கு முழு எதிர்ப்பும் வலுத்துள்ளது குறித்தும் பல செய்திகளும் தகவல்களும் குவிந்து கிடக்கின்றன.

சரி இவர்கள் பல மீட்டர்கள் ஆழத்தில் மண்ணை பிளந்து பூமியைக் குடைந்து மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுப்பதும் சரி ஆனால் அவற்றை பொதுமக்களின் விளைநிலங்களில் ஊடாக அவற்றின் குழாய்களை பதிப்படும் அதனால் போராட்டங்கள் முன்னெடுப்பதும் வலுத்து வருவதும் வாடிக்கையாகி வருகிறது.

பொறுப்புள்ள ஓர் இந்தியக் குடிமகனாக நேர்மையாக சம்பாதித்து அதற்கு ஒரு ரூபாய் கூட மறைத்துக் காட்டாமல் வருமான வரியை அதனையும் கொடுக்கப்பட்ட காலவரையறைக்குள் செலுத்தும் ஓர் ஒப்பற்ற கலைஞராக திகழும் திரு கமல்ஹாசன் கட்சியின் தலைவராக பொறுப்பு கூடியதும் சமூக அக்கறை இன்னும் அதிகமாய் ஆகிப் போனதில் வியப்பேதும் இல்லை எனலாம். எதற்காக இப்படிக் குறிப்பிடுகிறோம் என்றால் தனது ரசிகர்களை படம் வெளியாகும் தியேட்டரில் கொடியும் தோரணமும் கட்டி பட்டாசு வெடித்து காட்சிகளினிடையில் விசிலடித்து வீட்டிற்கு வீட்டிற்கு கிளம்பும் மனநிலையில் அவர்கள் நிரந்தரமாக இருந்துவிடக்கூடாது என்ற எண்ணமே மேலோங்கி இருந்துகொண்டிருந்தது, இதன் விளைவாகவே ரசிகர்மன்றங்கள் நற்பணி இயக்கமாக உருவெடுத்தது அதற்கு தானே தலைவனாக இருந்து வழிநடத்திச் செல்கிறார். இதன் மூலமாகவே எல்லோரும் அவருடைய மேன்மையான மனம் மக்களுக்கு நல்லது செய்யவே எப்போதும் யோசிக்கவே செய்கிறது.

சமூகத்தின்பால் அக்கறை கொண்டவராக விளங்கிவரும் திரு கமல்ஹாசன் அவர்கள் இயற்கையின் மீது தீராத காதல் கொண்டுள்ளதும் உண்மையே. உழவின் அருமையும் உழவர்களின் உழைப்பையும் பற்றி நிறைய பேசி இருக்கிறார்.

இங்கே விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்கப்படவேண்டும் அதற்கான எல்லா சுற்றுச்சூழலும் இங்கே இருக்கிறது. விவசாயிகளுக்கு மானியம் கொடுப்பது உதவி செய்வது என்பது தர்ம காரியம் அல்ல அவர்கள் நமது தலை காக்கும் காரியம் அதில் அவர்களுக்கு என்ன தேவை என்று கேட்டு ஊதியம் மானியம் கொடுக்க வேண்டும் தவிர மனசுக்கு புடிச்ச மாதிரி ஏதாவது போட்டுக் கொடுங்கையா என்று கேட்கக்கூடாது. இது வாழ்வாதாரம் அவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் கூட, மூன்று வேலையும் சரியாக சாப்பிடுபவர்களுக்கு அது தெரியும். நாமும் தான் அதை நினைக்க வேண்டும். உண்ணும்போது மண்ணை நினை என்று சொல்லிக்கொண்டே இருக்கிறேன். விவசாயம் வேண்டாம் நாங்க வேற எதாவது இண்டஸ்ட்ரி மேல இண்டஸ்ட்ரி பண்ணிகிட்டே போகுறோம் அப்படின்னு சொன்னா அப்புறம் நாம எதை சாப்பிடுவது ? என்னோட நண்பர் ஒருவர் சொன்னார் பூமிக்கு கீழே வைரமும் தங்கமும் இருக்கிறது விஞ்ஞானம் என்றால் மேலே நடந்து கொண்டிருப்பது விவசாயம் அதனை தொடருங்கள். ஏன் என்றால் தங்கமும் வைரமும் திங்க முடியாது அதைப் புரிந்துகொண்ட ஒரு இளம் தலைமுறையை நாம் உருவாக்க வேண்டும். நான் விவசாயி என்று மார்தட்டிச் சொல்லும் பெருமை அவர்களுக்கு உருவாக்க வேண்டும் திரு கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

https://www.youtube.com/watch?v=n0d1yNfLZAY

சரி அதென்ன புதிய வேளாண்மை கொள்கை 2020 ? சிறப்பான மாற்றம் வரும் எனில் அதை அமல்படுத்த முனைகையில் எதற்காக எதிர்ப்பு வலுக்கிறது போராட்டம் நடந்தது ? அப்படி என்ன தான் அதில் இருக்கிறது ?

விவசாயிகளின் வருமானம் பன்மடங்கு பெருகவும் அதில் உண்டாகும் சேதங்களை பெருமளவில் குறைக்கும் என்றும் உள்நாட்டு நுணுக்கங்களை தவிர்த்து வேளாண் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் பெரும் அக்கறையுடன் உள்ளது இந்த ஒன்றிய அரசு மேலும் அதில் இயற்கை உணவுச் சந்தையின் தேவைகளை பூர்த்தி செய்யவும் தேவையுள்ளது என மத்திய வேளாண் அமைச்சர் தெரிவித்தார்.

பல்வேறு பருவநிலைகளை கொண்ட மாநிலங்கள் கொண்ட இந்தியாவில் கிட்டத்தட்ட அணைத்து வேளாண் பொருட்கள் உற்பத்தியாகிறது, அதிலும் உலகின் முதன்மையாக திகழ்கிறது. உலக அளவில் வேளாண் பொருட்களின் தேவையை பூர்த்தி செய்யும் இந்தியா 9 ஆவது இடத்தில உள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அனைத்து வேளாண் பொருட்களும் உற்பத்தியாவதால் உள்நாட்டு தேவைகளும் பூர்த்தியாகும் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதியும் நடைபெறும் இரண்டு சந்தைகளிலும் வளர்ந்து வரும் வாய்ப்புகளை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இயற்கையாக விவசாயம் செய்திடும் மரபு இந்தியாவில் தொடர்ந்து வருவதால் இது சாத்தியம் என்றும் கருதப்படுகிறது.

சரி இவையெல்லாம் நல்ல கருத்துக்கள் தான் ஆனால் எதனால் இந்தச் சட்டத்தை விவசாயிகள் எதிர்க்கிறார்கள் ?

மத்திய பா ஜ க அரசு கொண்டுவர விரும்பும் புதிய வேளாண்மை கொள்கைகள் விவசாயிகளை வஞ்சிக்கிறது என்று எதிர்க்கட்சிகள் எதிர்க்கிறது. ஆனால் வேளாண் மசோதாக்கள் பற்றி எதிர்கட்சிகள் பொய் சொல்கின்றன என்கிறார் பிரதமர் மோடி.

விலை உறுதி மற்றும் பண்ணைச் சேவைகள் சட்டம் 2020

வேளாண்மை உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டுச் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம் 2020 !

அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் 2020 !