சென்னை : மார்ச் ௦8, 2023
மய்யம் என்பதை பெரும் சிந்தனையாளர்களான நமது முன்னோர்கள் பலரும் பல ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லி இருக்கிறார்கள் அதனை நான் அறியாமல் இருந்தால் தான் அது வியப்பு நான் அதை உள்வாங்கி உணர்ந்து கொண்டேன் – திரு கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்
“புத்தர் தம்ம பதா என்று சொல்வதும், சங்கரர் விசிஷ்ட அத்வைதம் என்று சொல்வதும், காந்தியார் சொல்லும் சமத்துவமும், வள்ளுவர் சொல்லும் நடுவு நிலைமையும் அந்த சென்ட்ரிசம் தான் என்றோ பெரும் சிந்தனையாளர்களான எல்லாம் அந்த நடுவு நிலைமையை தராசு தன்மையை போற்றியிருக்கிறார்கள். அது என்னுள் வந்தது வியப்பல்ல, வராமல் இருந்திருந்தால் தான் வியப்பு”