சென்னை : ஜூன் 14, 2௦23
எங்கேயும் எப்போதும் எனும் திரைப்படம் மூலமாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் யதார்த்தமான நடிப்பை வெளிக்கொணரும் விதத்தில் நடித்து வருபவர் செல்வி வினோதினி வைத்தியநாதன். தற்போது கடந்த மாதங்களில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராயின் தோழியாக முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இதற்கு முன்னரும் ஜிகர்தண்டா, சூரரைப் போற்று, ஒகே கண்மணி, அப்பா போன்ற படங்களில் நடித்திருந்தார்.
திரைப்பட கலைஞராக விளங்கிவரும் இவர் சமூகத்தின் பால் அக்கறை கொண்டவராகவும் பொதுநலத்தின் மீதும் பற்று கொண்டவராகவும் திகழ்கிறார். சமூக வலைதளமான ட்விட்டரில் அதிரடியாக பல கருத்துக்களை முன்வைத்து அதுகுறித்து ஆரோக்கியமான அங்கே முன்வைக்கப்படும் சமயோசிதமாகவும் நையாண்டி தொணியில் பதில் அளிக்கும்படி விவாதங்களில் பேசியதும் உண்டு. அரசியல் கருத்துக்களிலும் புகுந்து புறப்படுவார். மனதிற்கு பட்டதை சொல்லிடும் வழக்கமும் அதே சமயம் அதிலும் நியாயம் இருக்கும்படியும் உரக்கச் சொல்லிடுவார்.
சமீப காலங்களில் மாற்றுக் கட்சிகளில் நிலவும் நிகழ்வுகளை Sarcastic ஆக பதிவிடும் பழக்கமும் இவருக்கு கைவந்த கலை. இந்நிலையில் மய்யக் கொள்கை மற்றும் கோட்பாடுகளில் நம்பிக்கை கொண்டும், அனைத்திற்கும் மேலாக சாதி, மதம் ஆகியவற்றில் எந்த நம்பிக்கையும் கொள்ளாமல் நேர்மையுடனும் அனைத்து மக்களும் எனக்கு சகோதர சகோதரிகள் தான் அவர்கள் யாரையும் மொழியால், இனத்தால், மதத்தால், நிறத்தால் பிரித்துப் பார்ப்பதில்லை, அனைவரும் சமமே என்று அசையாத தனித்தன்மையுடன் திகழும் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு தலைவர் அவர்களை நேரில் சந்தித்து தமது விருப்பத்தினை தெரிவித்து உடனடியாக மக்கள் நீதி மய்யத்தில் தம்மை இணைத்துக் கொண்டார். அவ்வகையில் செல்வி வினோதினி வைத்தியநாதன் அவர்களின் வருகையும் மய்யத்தில் இணையும் ஆவலையும் ஏற்றுக் கொண்டு இணைந்தமைக்கு நன்றியும் வாழ்த்துகளையும் தெரிவித்தார் நம்மவர் அவர்கள்.
மய்யத்தில் இணைந்தமைக்கு வாழ்த்துகளை அனைத்து மய்யத்தார் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.