ஜூன் : 24, 2023
எமது கட்சியின் அலுவலகம் வரவேண்டும், இணைய வேண்டும் எனும் எண்ணமிருப்பவர்கள் யாவரும் தங்கள் சாதியையும் மதத்தினையும் வெளியிலேயே துறந்து விட்டு வரலாம். ஏனெனில் இங்கே யாவரும் சமமே எவரும் சகோதர சகோதரி எனும் உறவே ஆகவே தான் உயிரே உறவே தமிழே என்பார் நம் தலைவர்.
சொல்லும் செயலும் வெவ்வேறல்ல நிர்வாகிகளும் அவ்வழியே இணைய வரும் எவரையும் நம் உறவென்றே நினைப்பார்கள் நம் உயிரென்றே கருதுவார்கள். அவ்வாறே இன்றும் சென்னையின் கொளத்தூர், சைதாப்பேட்டை, திருவொற்றியூர், ராயப்பேட்டை என பல பகுதிகளைச் சேர்ந்த முப்பதிற்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை துணைத்தலைவர் திரு மௌரியா, பொதுச்செயலாளர் திரு அருணாச்சலம், இளைஞரணி மாநில செயலாளர் திரு. கவிஞர் சினேகன் ஆகியோர் முன்னிலையில் கட்சியின் அடிப்படை உறுப்பினராக தங்களை இணைத்துக் கொண்டனர். ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு மாநில செயலாளர் திரு முரளி அப்பாஸ், கொள்கை வடிவமைப்பு மாநில செயலாளர் திரு அர்ஜூனர் மற்றும் மாநில கொள்கை பரப்பு செயலாளர் திருமதி Dr. அனுஷா ரவி ஆகியோர் முன்னிலையில் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இன்று (24-06-2023) காலை 11 மணியளவில் மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் துணைத்தலைவர் திரு.A.G மௌரியா அவர்கள், பொது செயலாளர் திரு.அருணாச்சலம் அவர்கள் மற்றும் இளைஞர் அணி மாநில செயலாளர் கவிஞர் திரு. சினேகன் ஆகியோரின் முன்னிலையில் சென்னை கொளத்தூர், சைதாப்பேட்டை, திருவொற்றியூர், ராயப்பேட்டை பகுதிகளை சேர்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கட்சியில் இணைந்தனர். நிகழ்வில் ஊடகம் மற்றும் செய்தித்தொடர்பு மாநில செயலாளர் திரு.முரளி அப்பாஸ், கொள்கை வடிவமைப்பு மாநில செயலாளர் திரு. அர்ஜூனர், மாநில கொள்கை பரப்புரையாளர் திருமதி.டாக்டர் அனுஷா ரவி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். நிகழ்ச்சி ஏற்பாடு: இளைஞரணி மதுரை மண்டல அமைப்பாளர் திரு.பரணிராஜன், இளைஞரணி மதுரை மாவட்ட அமைப்பாளர் திரு.வினோத் கண்ணன். – மக்கள் நீதி மய்யம், தலைமை அலுவலகம்