நவம்பர் : 15, 2023

ஜூலை 15, 1921 ஆண்டு அப்போதைய சென்னை மாகாணம் (இப்போதைய திருநெல்வேலி மாவட்டம், ஆத்தூரில் பிறந்தவர்). 1938 ஆண்டில் சென்னை மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகங்களில் சென்னை மாணவர் சங்கம் அமைக்கப்பட்டு அதன் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு மாணவர்களை இணைத்து சுதந்திரத்திற்காக போராட்டத்தில் ஈடுபட்டார். 1940 இல் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை மதுரையில் துவக்கப்பட்ட போது அமைக்கப்பட்ட ஒன்பது பேர் கொண்ட குழுவில் இவரும் ஒருவர். இந்தியா சுதந்திரம் பெற்ற போது அதற்கான போராட்டத்தில் பங்கு பெற்றதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டிருந்தார். அதற்கு பின்னர் மக்களுக்கான அரசியலில் ஈடுபட்டு முக்கியமான பல பொறுப்புகளை வகித்தார். இரண்டு முறை சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்தார். அதன் பின்னர் இரண்டு முறை சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று MLA வாக பதவி வகித்தார். 1986 கொல்கத்தாவில் நடைபெற்ற மாநாட்டில் கட்சியின் மத்தியகுழுவில் தேர்வு செய்யப்பட்டு அப்பதவியை தொடர்ந்து வகித்து வருகிறார் மேலும் 1995 இல் நடைபெற்ற மாநில மாநாட்டில் தமிழகத்தின் மாநில செயலாளராக பதவியும் வகித்ததோடு 2002 ஆம் ஆண்டுவரை அப்பதவியில் தொடர்ந்தார். இதனிடையே 1982 முதல் 1991 வரை விவசாய சங்கத்தின் மாநில தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.

2021 ஆண்டில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தமிழக அரசின் தகைசால் தமிழர் விருதையும் ரூபாய் 10 லட்சமும் வழங்கி கௌரவவிக்கப்பட்டார். இதன் மூலம் தகைசால் தமிழர் எனும் விருதினை பெரும் முதல் ஆளுமை இவரே. விருதை மகிழ்வுடன் பெற்றுக்கொண்ட திரு.N. சங்கரைய்யா விழா மேடையிலேயே தனக்கு தமிழக அரசு அளித்த பரிசுத் தொகையான பத்து லட்சம் ரூபாயை கொரொனோ பாதிப்பால் நிவாரண நிதிக்கு நன்கொடையாக அளித்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 1௦2 வயதை எட்டி முதுமையில் இருந்த தோழர் காம்ரேட் என்றும் அழைக்கட்ட முதுபெரும் இடதுசாரி கம்யுனிஸ்ட் முன்னாள் தலைவர் திரு N. சங்கரைய்யா அவர்கள் இன்று இயற்கை எய்தினார். அன்னாரது மறைவிற்கு மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு. கமல்ஹாசன் அவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

“மாபெரும் தோழர் மறைந்தார். நூறாண்டு தாண்டிய தன் வாழ்வில், நினைவு தெரிந்த பருவம் முதல் ஒரு நாளையும், ஒரு நொடியையும் தனக்கென வாழாத் தகைமையைக் கைக்கொண்ட முதுபெரும் தோழர் என்.சங்கரய்யா நம்மை நீங்கினார். சுதந்திர வேட்கையிலும் அதன் பிறகு பொதுவுடைமைக் கொள்கையிலும் ஆழ்ந்திருந்த தோழர், ஒவ்வொரு நாளையும் எளிய மக்களின் நலனுக்காகவே செலவிட்டார். அவரைப் பிரிந்ததில் வருந்துவது இடதுசாரி இயக்கங்கள் மாத்திரமல்ல, நாகரிக அரசியல் விரும்பும் அத்தனை இயக்கங்களும்தான். பெரும்பான்மையாய் வாழும் பாட்டாளி வர்க்கத்தினரின் துயர நாள் இது. அவர் ஏந்திய பதாகையை நாமும் நம் நெஞ்சில் ஏந்த வேண்டும். மறைந்த தோழருக்கு என் மனம் கலங்கிய அஞ்சலி.”திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

https://x.com/ikamalhaasan/status/1724682794067005939?s=20

https://x.com/MalaimurasuTv/status/1724687695413465420?s=20

https://x.com/PTTVOnlineNews/status/1724691079025565902?s=20

https://x.com/Maiatamizhargal/status/1724790461829894381?s=20

https://x.com/tncpim/status/1724783607636803853?s=20