ஜனவரி : 30, 2024

தேசப்பிதா, பாபுஜி, காந்திஜி என அன்பாக அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தலைமையில் ஆங்கிலேயரின் அடக்குமுறை அடிமைத்தனம் தகர்க்க அஹிம்சை வழியை கையில் எடுத்தார், சத்தியாகிரகம் தான் சாத்தியம் என்றார் அதன் வழியே விடுதலை வேண்டி நின்ற அனைவரையும் ஒன்றாக இணைத்து அறவழியில் போராடி வென்றார். அதன் விளைவாக 1947 இல் ஆகஸ்ட் 15 அன்று நள்ளிரவில் நம் இந்திய தேசம் சுதந்திரம் பெற்றது. சில முரண்பாடுகள் கொண்ட காரணத்தால் காந்தியாரின் மீதிருந்த கருத்து வேறுபாடு அவரை கொன்றுவிடும் எண்ணத்தில் சென்றதால் எவரும் எதிர்பாராத அந்தப் பொழுதில் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியானார். வேதனையை சுமக்க இயலாமல் இந்த தேசமே கண்ணீர் சிந்தியது. மகாத்மாவின் எண்ணங்கள் கருத்துக்கள் அவர்தம் வழியை தனது பாதையாக தேர்வு செய்து கொண்ட திரு.கமல்ஹாசன் அவர்கள் தனது தொழிலாக தொடங்கிய நடிப்பை நாளடைவில் பெரும் கலையாக வடித்துக் கொண்டார், அதில் பெறும் ஊதியம் எல்லாம் வங்கிப் பரிமாற்றம் வழியாகவே இன்றுவரை கடைபிடித்து வருகிறார். தனக்கு தனது துறைக்கு வெளியார் எவரேனும் அவசியமற்று எந்த காரண காரியம் இல்லாமல் தடை செய்தாலோ பழி சுமத்தினாலோ அதை நீதியை நிலைநாட்டும் நீதிமன்றங்கள் மூலமாகவே நேர்வழியில் எதிர்கொண்டு வென்று நிற்கிறார். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை துவக்கி இன்றுவரை நேர்வழி மாறாமல் மக்களுக்கென ஓர் நல்லரசியல் செய்து வருகிறார். இதுவரை நடைபெற்ற பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் ஓட்டுக்கு எந்த அன்பளிப்பும் வழங்கிடாமல் பல லட்சம் வாக்குகளைப் பெற்றார். அத்தகைய நேர்மையாளர் தமது மானசீக குருவாக கருதும் காந்தியடிகள் அவர்களின் நினைவு நாளான இன்று புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

“தான் வாழும் சமூகத்திற்குப் பாடுபட்டவர் உண்டு. தேச அளவில் தொண்டு செய்ய எழுந்தோர் உண்டு. ஆனால், ஒரு பெரும் காலத்தின் மனசாட்சியாகவே உயர்ந்து திகழ்ந்த மகா மனிதர்கள் அபூர்வம். அவர்களில் முதன்மையானவர் காந்திப் பெருமகனார். அன்னாரின் நினைவு நாளில், அவர்தம் சொற்கள் நம்மை வழிநடத்துவதாக.” திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்