சென்னை : பிப்ரவரி 13, 2024

கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதியன்று நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களை நிறுவனத் தலைவராக கொண்டு உதயமானது மக்கள் நீதி மய்யம். அதற்கடுத்த 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தனித்துக் களமிறங்கிய போது போட்டியிட இந்திய தேர்தல் ஆணையம் டார்ச் லைட் சின்னத்தை வழங்கியது. அதனை தொடர்ந்து துவங்கிய தேர்தல் பிரச்சாரத்தில் டார்ச் லைட் சின்னத்தினை பொதுமக்கள் பலரும் தங்கள் நினைவில் வைத்துக்கொண்டு நம்மவரின் பல்லாண்டுகால நேர்மை, இனம், மதம், சாதி, மொழி கடந்து எல்லோரும் என் சகோதர சகோதரிகளே என்று தொடர்ச்சியாக சொல்லி வந்ததையும் உணர்ந்து தங்களது பெருவாரியான ஆதரவினை டார்ச் லைட் சின்னத்தில் வாக்களித்து தெரிவித்தனர். மேலும் 2021 இல் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் டார்ச் லைட் சின்னம் கிடைக்கப்பெற்று மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் தமிழகமெங்கும் வேட்பாளர்களை களமிறக்கிய தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களும் கோவை தெற்கில் போட்டியிட்டார். ஆயினும் பிற கட்சியினர் வாக்காளர்களுக்கு கையூட்டு மற்றும் அன்பளிப்புகள் தந்து நேர்மையற்ற வழியில் வெற்றியை மிகச் சொற்ப வித்தியாசத்தில் பறித்துக் கொண்டனர், என்றாலும் துவண்டு விடாத தலைவர் அவர்கள் அடுத்து நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் அதே டார்ச் லைட் சின்னத்தில் வேட்பாளர்களை போட்டியிட வைத்து மக்களின் நன்மதிப்பைப் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள், பொதுக்குழு மற்றும் செயற்குழு நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை மேற்கொண்டு அவர்களது கருத்துக்களை கூர்ந்து கவனித்து தேர்தலை சந்திக்க பொறுப்பாளர்களை நியமித்து சொந்த அலுவல் காரணமாக வெளிநாடு சென்றுள்ளார். இந்நிலையில் இதற்கு முன்னதாக கடந்த டிசம்பர் மாதத்தின் இடையில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் தமது மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இதுவரை கிடைத்து வந்த டார்ச் லைட் சின்னத்தினை ஒதுக்கித் தருமாறு விண்ணப்பிக்க அதனை பரிசீலித்த ஆணையம் இன்று அதே போல் டார்ச் லைட் சின்னத்தினை உபயோகித்துக்கொள்ள எழுத்தில் அதிகாரபூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைமையும், நிர்வாகிகளும் மற்றும் தொண்டர்கள் அபிமானிகள் என அனைவரும் டார்ச் லைட் சின்னம் மீண்டும் கிடைத்ததற்கு பெரும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார்கள் என்றால் மிகையாகாது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்திற்கு வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்டது.” – மக்கள் நீதி மய்யம், ஊடகப்பிரிவு

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மீண்டும் தமது கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் வழங்கிட வேண்டும் என்று கடந்த மாதம் மக்கள் நீதி மய்யம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டது, விண்ணப்பத்தினை பரிசீலித்து தற்போது டார்ச் லைட் சின்னத்தை வழங்கி ஒப்புதல் அளித்துள்ளது ECI (நமது இணையதளத்தில் வெளியான தகவல் செய்தி)

http://tinyurl.com/yc2wnzk5