ஆகஸ்ட் 17, 2024
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் பாராளுமன்ற உறுப்பினரான திரு. தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்தநாளான இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தமது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார்.
“இன்று பிறந்த நாள் காணும் என் அன்புத் தம்பி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், எழுச்சித் தமிழர் திரு.தொல் திருமாவளவன் ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல்மயப்படுத்திய ஜனநாயகவாதி. சமூக அநீதிகளுக்கு எதிராக தீரத்துடன் போராடுகிற புரட்சியாளர். சமூகநீதிக் கோட்பாட்டை அனைத்துத் தரப்பினரும் புரிந்துகொள்ளும்படி விளக்கும் ஆற்றல் மிக்க பேச்சாளர். இந்த இனிய நாளில், தம்பி திருமாவளவன் கையில் எடுத்திருக்கும் பெரும்பணிகள் வெல்க என வாழ்த்தி மகிழ்கிறேன். ஜெய் பீம்” ! – திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்
நன்றி : தலைவர் Dr. கமல்ஹாசன் & ம.நீ.ம