மும்பை : அக்டோபர் 10, 2024
நமது இந்தியாவின் பாராம்பரியம் மிக்கதும் மிகப்பெரும் குழுமம் “டாடா” அதன் முன்னாள் செயல்தலைவரான திரு.ரத்தன் நாவல் டாடா அவர்கள் வயது மூப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்ட போது தனது 86 வயதில் இன்று மும்பையில் காலமானார். டாடா குழுமத்தை பல்வேறு நிலைகளுக்கு உயர்த்தியதில் நிச்சயம் ரத்தன் அவர்களின் பங்கு அளப்பரியது. திருமணம் புரிந்து கொள்ளாமல் வாழ்ந்து மறைந்தவர். தனது நிறுவனம் பல துறைகளில் சிறந்து விளங்கியதற்கு இவரது சிந்திக்கும் திறனும் அதனை சமயோசிதமாக செயல்படுத்துவதில் இருந்தது.
தமது முன்னோர்கள் துவக்கிய டாடா குழுமம் பல துறைகளில் கோலோச்சி வருகிறது அனைவருக்கும் தெரிந்ததே. தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளும் உப்பு முதல் வானில் பறக்கும் விமானம் வரை டாடாவின் குழுமம் இந்தியாவில் மட்டுமல்லாது உலகத்தின் பல நாடுகளில் கொடிகட்டி பரந்துவருகிறது.
இரும்பு உருக்காலைகள், விமான போக்குவரத்து, தேநீர் & குளிர்பானங்கள், கார்கள், இலகுரக மற்றும் கனரக சரக்கு வாகனங்கள், ஆன்லைன் ஸ்டோர்கள், ஹோம் அப்ளையன்செஸ், கணினி மென்பொருள் நிறுவனம், கல்வி நிறுவனம், ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு நிறுவனங்கள், நட்சத்திர ஓட்டல்கள் மட்டுமல்லாது உலக நாடுகளில் மிகப் பிரபலமான சொகுசு கார்களான லேன்ட் ரோவர் மற்றும் ஜாகுவார் வகை கார்களை இந்தியாவில் விற்பனை செய்யும் நிறுவனம் என டாடா குழுமம் கால் பதிக்காத துறைகளே இல்லை என கூறலாம்.
வணிகம் மட்டுமே குறிக்கோளாகவும் பணம் ஈட்டுவது மட்டுமே முதன்மையானதாக கொள்ளாமல், சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் தாங்கள் நிறுவிய நிறுவனங்கள் மூலமாக லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரும் ஏற்றங்களை உண்டாக்கியது. ரத்தன் டாடாவின் தந்தையான ஜாம்செட்ஜி துவங்கி ரத்தன் டாடா வரை நன்கொடைகள் தொகை சுமார் 8.29 லட்சம் கோடிகள் என விவரங்கள் உள்ளது. டாடா குழுமம் நன்கொடைகளை கிள்ளித் தரவில்லை அள்ளித் தந்துள்ளது.
பல வகைகளில் இந்திய பொருளாதாரத்தில் பெரும்பங்கு வகிக்கும் டாடா குழுமத்தில் நிர்வாகத் தலைவராக திரு.ரத்தன் டாடா அவர்கள் முறையே 1991 – 2012 & 2016 – 2017 வரை பதவி வகித்து ஓய்வு பெற்றார். அதன் பின்னரும் பல சமூக நல நிகழ்வுகளில் பெரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு அதற்கான தொண்டுகளை செய்திட பக்கபலமாக திகழ்ந்தார்.
பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய உயரிய விருதுகளை பெற்றவர், குழுமத்தின் பணிகளில் அயராது தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்த திரு.ரத்தன் டாடா அவர்கள் ஓய்விற்கு பின்னர் இறுதியாக தனது 86 வயதில் இதயத்தின் இயக்கம் நின்றதால் நமது மண்ணை விட்டு மறைந்தார்.
திரு.ரத்தன் டாடா அவர்களின் மறைவையொட்டி 2008 இல் மும்பை மாநகரில் உள்ள தாஜ் நட்சத்திர ஓட்டலில் தாக்குதல் நடைபெற்ற பின்னர் நட்பு ரீதியாக ரத்தன் டாடா அவர்களைச் சந்தித்து பேசிய திரு.கமல்ஹாசன் அவர்கள் இத்தகைய இழிசெயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இந்தத் தாக்குதலில் சற்று தளர்ந்தாலும் நிலைகுலையாமல் மீண்டும் புதுத் தெம்புடன் ஓட்டலை இயங்கச் செய்தது குறித்தும் குறிப்பிட்டுள்ளார் நம்மவர் அவர்கள். டாடா அவர்களின் மறைவு குறித்து தமது ஆழ்ந்த இரங்கலை அன்னாரது குடும்பத்திற்கு மற்றும் டாடா குழும ஊழியர்கள் ஆகியோர் அனைவருக்கும் கனத்த இதையத்துடன் தெரிவித்துள்ளார்.
“Ratan Tata Ji was a personal hero of mine, someone I’ve tried to emulate throughout my life. A national treasure whose contributions in nation-building shall forever be etched in the story of modern India. His true richness lay not in material wealth but in his ethics, integrity, humility and patriotism. In the immediate aftermath of the 2008 Mumbai attacks, I met him while staying at the iconic Taj Hotel. In that moment of national crisis, the titan stood tall and became the embodiment of the Indian spirit, to rebuild and emerge stronger as a nation. My profound condolences to his family, friends, Tata Group and my fellow Indians” – Dr. Kamal Haasan, Founder President – Makkal Needhi Maiam political party
நவீன இந்தியாவை உருவாக்கியதில் முக்கியப் பங்காற்றியவரும், எளிமைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவருமான தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் திரு.கமல் ஹாசன் அவர்களின் இரங்கல்
நன்றி : மக்கள் நீதி மய்யம், சமூக ஊடகம்