நவம்பர் 15, 2024
18 வயது பூர்த்தியடைந்த இந்தியக் குடிமக்கள் யாராகினும் இந்திய தேர்தல் ஆணையம் வழங்கும் வாக்காளர் அடையாள அட்டை பெற பட்டியலில் தரப்பட்டுள்ள தகுந்த ஆவணங்களை இணைத்து விண்ணபிக்க வேண்டும். பின்பு ஆணையம் புதிய வாக்காளர் அடையாள அட்டையை வழங்கும். மேலும் ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்போர் அதில் ஏதேனும் மாற்றம் அல்லது திருத்தம் செய்ய வேண்டுமெனில் 16, 17, 23 மற்றும் 24 ஆகிய நான்கு நாட்களில் அருகாமையில் அமைக்கப்படும் சிறப்பு முகாமில் தங்களுக்கு தேவையான திருத்தங்களை செய்து கொள்ளலாம். அதாவது முகவரி மாற்றம், புகைப்படம் புதுப்பித்தல், அலைபேசி எண் திருத்தம் போன்றவைகளை மேற்சொன்ன தேதிகளில் நடைபெறவிருக்கும் முகாம்களில் தகுந்த ஆவணங்களை வைத்து வாக்காளர்கள் விண்ணபித்து கொள்ளலாம்.
சராசரி இந்தியக் குடிமக்கள் நமது நாட்டில் நடைபெறும் ஜனநாயக தேர்தல்களில் தங்களது வாக்கினை தவறாமல் செலுத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் வலியுறுத்துவார். நமக்கு தரப்பட்டுள்ள உச்சபட்ச அதிகாரத்தை நிச்சயம் தவறாமல் உபயோகபடுத்திக் கொள்ள வேண்டும் அதற்கான ஆதாரம் இந்த வாக்காளர் அடையாள அட்டை. எனவே தவறாமல் அதனை விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு செய்தியை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் வாயிலாக அறிக்கை வெளியிட்டுள்ளது மக்கள் நீதி மய்யம் கட்சி. மேலும் முகாம்களின் போது கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முகாமில் சேவையை பயன்படுத்திக்கொள்ள வரும் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருமாறும் அவ்வறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அன்புள்ள வாக்காள பெருமக்களே மறந்துவிடாதீர்கள் நாளை மற்றும் மேற்குறிப்பிட்ட நாட்களில் நடைபெறவிருக்கும் வாக்காளர் அடையாள அட்டை திருத்தம்/பெயர் இணைத்தல் முகாமில் அணுகி இச்சேவையை பெற்றுக் கொள்ளுங்கள் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
மக்களுக்காக தலைவர் ; மக்களுக்காக மய்யம்.
“வாக்காளர் பட்டியல் திருத்தம் முகாம் சுற்றறிக்கை அன்புடையீர், தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வருகிற நவம்பர் 16, 17 மற்றும் 23, 24 ஆகிய தேதிகளில் (சனி, ஞாயிறு) வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இவற்றில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளன. இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், தங்கள் பகுதியைச் சேர்ந்த, 18 வயது நிறைவடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் முயற்சியில் நமது நிர்வாகிகள் ஈடுபட வேண்டும். அதேபோல, பெயர்கள் விடுபட்டிருந்தால், அவற்றைச் சேர்க்கவும் உதவ வேண்டும். `வாக்களிப்பது ஒவ்வொருவரின் தலையாய கடமை’ என்று நமது தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதைக் கருத்தில்கொண்டு, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் அனைத்து நிர்வாகிகளும் முழுமையாக ஈடுபட வேண்டும். நன்றி ! நாளை நமதே ! ஆ. அருணாச்சலம் M.A., B.L., பொதுச்செயலாளர் – மக்கள் நீதி மய்யம். (14-11-2024)
https://twitter.com/MaiamOfficialIT/status/1857376968913653800
https://twitter.com/Maiatamizhargal/status/1857452235099197820
நன்றி : மக்கள் நீதி மய்யம் மற்றும் சமூக ஊடக இணையதளங்கள்