டிசம்பர் 24, 2024

தமிழகத்தின் முன்னாள் முதல்வர், அதிமுகவை தோற்றுவித்தவர் மக்கள் திலகம் என அன்போடு அழைக்கப்படுபவர், தமிழ்த் திரையுலகில் முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம்.ஜி.ஆர் எனும் மூன்றெழுத்து அடையாளத்திற்கு சொந்தக்காரர் திரு.எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள். திரைப்படங்களில் நல்லொழுக்கம் போதித்து தாயின் மீதும் மதிப்பும் மரியாதையும் கொண்டும் ஏழை எளியவர்களுக்கு உதவிடும் தன்மையுடைய ஓர் நாயகனாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். அதனாலேயே மக்களின் மனதில் இன்றுவரை நீங்காமல் இடம்பெற்றுள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடிகர் திலகத்துடனும் மக்கள் திலகத்துடனும் நடித்து பெயர் பெற்றார் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள். அவ்வளவு சுலபத்தில் எம்.ஜிஆர் அவர்களை அணுகிட முடியாது அவரது அழைப்பிற்காக பலரும் காத்திருக்க நம்மவரோ வெகு சாதாரணமாக நேரில் சந்தித்து பேசிடும் அளவிற்கு இருவருக்கும் ஓர் அழகிய அன்னியோன்யம் உருவாகி இருந்தது. இந்த பந்தத்தை பல மேடைகளில் தனக்கேயுரிய பாணியில் மிகுந்த சுவையுடன் குறிப்பிட்டுள்ளார் நம்மவர். கட்சி துவக்கப்பட்ட பின்னர் மக்களிடம் இலகுவாக பழகி அவர்களது மனதில் அழுந்தப் பதிந்து தமிழகத்தின் முதல்வரானார். தொடர்ச்சியாக அரசியலில் தவிர்க்க முடியாத ஓர் ஆளுமையாக வாழ்ந்து 1987 இல் டிசம்பர் 24 மறைந்தார் எம்.ஜி.ஆர் அவர்கள். அவருடன் பழகிய நினைவுகளை நெஞ்சில் நிறுத்தி தனது புகழாரத்தை சூட்டியுள்ளார் நம்மவர் தலைவர் அவர்கள்.

நான் குழந்தையாகத் தவழ்ந்த நேரத்தில் மடி ஒன்றைக் கொடுத்தவர்; நான் சிறுவனாக சினிமா புகுந்த காலத்தில் நட்சத்திரமாக முன்னோடியவர்; மக்கள் மனம் கவர்வதில் எனக்கு மானசீகப் பாடம் நடத்தி ஆசிரியர் ஆனவர்… அன்புக்கும் மரியாதைக்குமுரிய உறவாக நிலைத்துவிட்ட எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவு நாள் இன்று. எந்நாளும் மறையாத நினைவுகளைத் தந்தவரை இந்நாளில் வணங்குகிறேன்.” – திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

https://twitter.com/ikamalhaasan/status/1871396963641381101

https://twitter.com/maiamofficial/status/1871445184569077868

https://twitter.com/Maiatamizhargal/status/1871594164527501814

#DrMGR | #MGRamachandran | #MGR | #KamalHaasan | #MakkalNeedhiMaiam

நன்றி : மக்கள் நீதி மய்யம்