டிசம்பர் 12, 2024

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது. சீனாவை சேர்ந்த நடப்பு செஸ் சாம்பியனான டிங் லிரேனை எதிர்த்து 19 வயதான தமிழகத்தை சேர்ந்த வீரர் குகேஷ் மோதினார்.

இருவருக்கிடையே பதினான்கு சுற்றுக்கள் ஆட்டம் நடைபெற்றது. போட்டியின் ஆரம்பத்தில் குகேஷின் கைகளே ஓங்கியிருந்தாலும் உலக சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள லிரேன் குகேஷுக்கு கடும் சவால் தரும்படி ஆடினார். ஒன்பதாவது சுற்றில் இருவரும் எடுத்த புள்ளிகள் சமமாக இருந்தன. பத்தாவது மற்றும் பதினொன்றாவது சுற்றுகளில் இருவருமே கடுமையாக போராடினர். பன்னிரண்டாவது சுற்றில் டிங் குகேஷ்க்கு சவாலான ஆட்டத்தை ஆடி புள்ளிகளை சேர்த்துக் கொண்டார். பின்னர் நடைபெற்ற 13 ஆவது சுற்றை உலகமே உற்றுக் கவனித்தது. ஆயினும் அந்த சுற்று யாரும் எதிர்பாராவண்ணம் டிராவில் நிறைவுற்றது. மிகுந்த பாரபரப்புடன் 14 ஆவது சுற்றை ஆடிய இருவரும் ஒருகட்டத்தில் டிராவில் முடிந்து விடக் கூடும் என்று பார்வையாளர்கள் கணித்த போதும் அதற்கு இடம்தராமல் நமது இளம் வீரர் குகேஷ் அதிரடி வெற்றியை பெற்றார். உலகின் மிக இளம்வயதுடைய செஸ் விளையாட்டு வீரர்களில் ஒருவராக வலம் வந்த குகேஷ் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். நமது நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் தாமே வென்றது போல் மகிழ்ச்சியில் திக்கு முக்காடினர். உலக அரங்கில் செஸ் சாம்பியனாக முடிசூடிய குகேஷ்க்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

இந்த வெற்றியை ரசித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள் திறமையுடன் போராடி வெற்றியை பெரும் வீரர்களை மனதார பாராட்டி மகிழும் நம்மவர் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ் அவர்களை கண்டு மிகப் பெருமிதம் கொள்வதாக தமது வாழ்த்து தெரிவித்துள்ளார்.

History checkmated !

Kudos to Mr D Gukesh for becoming the youngest World Champion in chess history. India beams with pride! Overcoming the opponent’s advantageous white pieces in the final game, speaks volumes of our champions composure and fortitude. – Mr. Kamal Haasan, President – Makkal Needhi Maiam

நன்றி : மக்கள் நீதி மய்யம்

0 Shares