டிசம்பர் 27, 2024
இந்திய தேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நிதியமைச்சர், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் பணியாற்றியவர். திட்டக்குழு கமிஷன் தலைவராகவும் பணியாற்றியவர். இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி ஆகியோரை போன்றே முழு ஐந்தாண்டு பிரதமர் பதவியை வகித்த பின்னர் மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார், அதன் தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் அதாவது 2004 முதல் 2014 வரை பதவியில் நீடித்தார்.
1991 இந்தியா கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டபோது பிரதமராக இருந்த திரு.நரசிம்மராவ் அவர்கள் அரசியலில் எந்த பதவியிலும் அல்லாத திரு.மன்மோகன் சிங் அவர்களை நிதியமைச்சராக தனது தலைமையில் இயங்கும் அமைச்சரவையில் இணைத்துக் கொண்டார். பொறுப்பினை ஏற்றுக் கொண்ட சிங் அவர்கள் பல அரசியல் வல்லுனர்கள் எதிர்ப்பையும் மீறி பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையை அமல்படுத்தினார். சீர்திருத்தம் அடைந்த போதும் அடுத்து வந்த 1996 நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவி வாஜ்பாயி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தது. ஆயினும் இரண்டே ஆண்டுகளில் பாஜக அரசு கவிழ்ந்து மீண்டும் தேர்தல் நடைபெற்றது அப்போதும் வாஜ்பாயி அரசே அமைந்தது. 1998 – 2004 வரை அவையில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியாக எதிர்க்கட்சித்தலைவர் பதவியில் தேர்வாகினார் சிங்.
அதன்பின்னர் அமைந்த காங்கிரஸ் அரசில் மிக முக்கியமாக சொல்வதென்றால் மன்மோகன்சிங் அவர்களின் நகர்வுகளால் இந்தியா பொருளாதாரத்தில் வெகு வேகமாக வளர்ச்சியடைந்தது. ஆட்சியின்போது பல ஏற்றத் தாழ்வுகளால் விமரிசனங்களை எதிர்கொண்ட மன்மோகன்சிங் அரசு 2014 தோல்வியுற்றது. எனினும் மிகச்சிறந்த பொருளாதார வல்லுனராக திகழ்ந்தார் திரு.மன்மோகன்சிங் அவர்கள்.
திரு.மன்மோகன்சிங் அவர்கள் தனது 92 ஆவது வயதில் இயற்கை எய்தினார். மிகச்சிறந்த ஓர் பொருளாதார வல்லுநர் மற்றும் பிரதமராக திகழ்ந்தவர் குறித்து தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள்.
தலைவரின் ட்வீட் ஆங்கில வடிவம் மற்றும் அதன் தமிழாக்கம் கீழே பதிவிடப்பட்டுள்ளது.
India has lost one of its most eminent statesmen and scholars. The passing of Dr. Manmohan Singh marks the end of an era in Indian polity. A man of quiet dignity, he reshaped the nation through his visionary economic and social policies.
Few have influenced the nation’s trajectory with such far-reaching impact. His policies, both as Finance Minister and Prime Minister, empowered millions, strengthening the fabric of Indian democracy and uplifting the most vulnerable. His governance was marked by a deep commitment to inclusivity and social justice, ensuring that India’s progress reached every corner of society.
His legacy will endure in the annals of Indian history, forever remembered as a leader who quietly but profoundly changed the course of the nation. My sincerest condolences to his family and to the nation on the loss of one of its finest sons.
Dr. KamalHaasan, President – Makkal Needhi Maiam
இந்தியா தனது தலைசிறந்த அரசியல்வாதிகள் மற்றும் அறிஞர்களில் ஒருவரை இழந்துவிட்டது. டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவு இந்திய அரசியலில் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. அமைதியான கண்ணியம் கொண்ட அவர், தனது தொலைநோக்கு பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகள் மூலம் தேசத்தை மறுவடிவமைத்தார்.
தலைவர் மன்மோகன்சிங் அவர்களின் மறைவிற்கு தெரிவித்த இரங்கல் கடிதத்தின் தமிழாக்கம்
இத்தகைய தொலைநோக்கு தாக்கத்துடன் நாட்டின் பாதையில் செல்வாக்கு செலுத்தியவர்கள் சிலர்.
அவரது கொள்கைகள், நிதியமைச்சர் மற்றும் பிரதம மந்திரி ஆகிய இரண்டும், மில்லியன் கணக்கான மக்களுக்கு அதிகாரம் அளித்தது, இந்திய ஜனநாயகத்தின் கட்டமைப்பை வலுப்படுத்தியது மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை மேம்படுத்தியது. இந்தியாவின் முன்னேற்றம் சமூகத்தின் ஒவ்வொரு மூலையிலும் சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில், உள்ளடக்கம் மற்றும் சமூக நீதிக்கான ஆழ்ந்த அர்ப்பணிப்பால் அவரது ஆட்சிமுறை பரந்து பேசப்பட்டது.
அவரது பாரம்பரியம் இந்திய வரலாற்றின் வரலாற்றில் நிலைத்திருக்கும், தேசத்தின் போக்கை அமைதியாக ஆனால் ஆழமாக மாற்றிய ஒரு தலைவராக என்றென்றும் நினைவுகூரப்படும். அவரது சிறந்த மகன்களில் ஒருவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் தேசத்துக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
– திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்
நன்றி : மக்கள் நீதி மய்யம் மற்றும் செய்தி இனையதள சமூக ஊடகங்கள்