டிசம்பர் 24, 2024
தமிழகத்தின் தவிர்க்க முடியாத ஓர் ஒப்பற்ற ஆளுமை திரு.ஈ.வெ.ராமசாமி அவர்கள். வெகு சுலபமான அடையாளமாக தந்தை பெரியார்.
இந்தப் பெயர் இன்றுவரை தகித்துக் கொண்டிருக்கிறது. தீண்டாமை கூடாதென்றும், பெண்ணடிமை ஒழிக்கப்பட வேண்டும் என்றும், பெண்கல்வி ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும், மூடநம்பிக்கைகள் அறவே நீக்கப்பட வேண்டும் எனவும், எளிய மனிதர்களுக்கு ஆலயப்பிரவேசம் கட்டாயம் எனவும் தாம் இறக்கும் வரை தமது வாழ்நாள் முழுதும் ஓய்வில்லாமல் பம்பரம்போல் சுற்றிக் கொண்டிருந்தார் எனலாம்.
தான் எது சொல்லியிருந்தாலும் அதை எப்போது சொல்லியிருந்தாலும் அவற்றை முழுதும் நம்பிடாதே சொன்னவற்றை என்ன ஏதென்று தீர ஆராய்ந்து பார் எனவும் சொல்லியவர் தந்தை பெரியார் அவர்கள். நாத்தீகம் என்னவென்பதும் பகுத்தறிவு என்னவென்பதும் மூலை முடுக்கெல்லாம் தெளிவாக புரியச் செய்தவர். தந்தைப் பெரியாரின் கொள்கை கோட்பாடுகளை முழுதாக உணர்ந்து தன்னில் உள்ள புத்தியை பகுத்தறிந்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் நம்மவர் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள். பெரியாரின் சிந்தனைகளை முழுதும் உள்வாங்கி அதன் சாராம்சத்தை இன்றளவும் மெய்ப்பித்து வருகிறார் நம்மவர். தான் மதித்துப் போற்றும் மிக முக்கிய தலைவர்களில் பெரியார் அவர்கள் தவிர்க்க முடியாதவர் என்பார். அத்தகைய பெருமைமிகு தந்தை பெரியாரின் 51 ஆவது நினைவு நாளான இன்று தமது புகழஞ்சலியை செலுத்துகிறார் மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள்.
“சமூகத்தில் தென்படும் இழிநிலையைச் சகித்துக்கொள்ளாதவர் தந்தை பெரியார். உயர்வு தாழ்வற்ற சமநிலை மனிதர்களுக்கிடையே நிலவ வேண்டும் என்பதற்காகத் தன் வாழ்நாளையே செலவிட்டுப் பரப்புரை செய்தவர்.
தன் சொற்களுக்குப் பொருத்தமாக வாழ்ந்தும் காட்டியவர். கொண்ட கொள்கையை இறுதிவரை எடுத்தியம்பிய தந்தை பெரியாரின் நினைவு நாளில் அவரது வழிகாட்டுதல்களைக் கைக்கொள்வோம். பாரபட்சமில்லாத சமூகம் நோக்கி வளர்வோம். – திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்
https://twitter.com/Maiatamizhargal/status/1871603888002109511
#ThandhaiPeriyar #EVR #KamalHaasan #MakkalNeedhiMaiam #Centrism
நன்றி : மக்கள் நீதி மய்யம்