ஜனவரி 01, 2025

ஆங்கில புத்தாண்டு 2025 இன்று பிறந்துள்ளது. உலகம் முழுதும் பெரும் கோலாகலம் பூண்டுள்ளது. எந்த வேறுபாடும் இல்லாமல் உலகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் மக்கள் தங்களின் மகிழ்ச்சியை உற்சாகத்தினை வெளிக்காட்டி கொண்டடுவார்கள். புதிய உத்வேகம், புதிய மனிதர்களை சந்திப்பது மற்றும் புது தொடக்கங்கள் என எல்லாவற்றிலும் புதியதை வரவேற்று உற்சாகம் அடைவார்கள் என்பதற்கு புத்தாண்டு சிறப்பான நாள். நமது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள் தனது உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

As we step into 2025,

here’s to owning our path and writing a better story. The new year isn’t just about time moving forward—it’s about us moving forward, wiser, stronger, and ready to shape our own destinies. Let’s make it the year we turn our best dreams into reality. Happy New Year to you all !

2025ல்

நாம் அடியெடுத்து வைக்கும் இத்தருணம், இப்பாதையை நமதாக்கிக்கொண்டு ஒரு சிறந்த அத்தியாயத்தை எழுதுவதற்கான நேரம். புத்தாண்டு என்பது காலத்தால் முன்னால் போவது என்பது மாத்திரமல்ல; ஞானத்தோடு, உறுதியோடு, நமது எதிர்காலத்தை நாமே வடிவமைத்துக்கொள்ளத் தயார் நிலையோடு முன்னோக்கி நகர்வது. நமது நல்ல கனவுகளை நனவாக்கும் ஆண்டாக இப்புத்தாண்டை ஆக்குவோம். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் !

  • திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்