ஜனவரி 04, 2025
கமல்ஹாசன் நற்பணி இயக்கம் – வட அமெரிக்கா பிரிவின் நிர்வாகிகள் இணைந்து மதுரை மலைச்சாமிபுரத்தில் நம்மவர் படிப்பகத்தினை கட்டுமானம் செய்து தேவையான புத்தகங்கள் மற்றும் கணினிகள் உள்ளிட்ட வசதிகளுடன் உருவாக்கி அப்பகுதி மக்களுக்கு பயன்படும் வகையில் செய்து தந்துள்ளார்கள் என்பதை நமது இணையதளத்தில் இதற்கு முன்னர் குறிப்பிட்டிருந்தோம். அதன் திறப்புவிழாவில் நமது மக்கள் நீதி மய்யம் தலைவர் அவர்கள் இதைப் போன்ற இன்னொரு நம்மவர் படிப்பகம் கமல் பண்பாட்டு மையம் சார்பில் நிர்மாணிக்கப்படும் என்று வழங்கிய வாக்குறுதியை அடுத்து அவரது சொந்த ஊரான பரமக்குடியில் நம்மவர் படிப்பகம் (இரண்டாவது படிப்பகம்) அமைக்கப்பட்டு திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது.
அதனையடுத்து கமல்ஹாசன் நற்பணி இயக்கம் வட அமெரிக்கா சார்பில் மூன்றாவது நம்மவர் படிப்பகம் அருப்புக்கோட்டையில் நிர்மானிக்கப்படவிருக்கிறது. அங்கு பொது கல்வி, மருத்துவம், துணை மருத்துவ படிப்புகள் (Para Medical Courses), அறிவியல், மற்றும் திறன் வளர்ச்சி (Skill Development) பெற்றிடும் வகையில் அதற்குண்டான அனைத்து புத்தகங்கள் ஆகியவற்றை நிர்வாகிகள் குழு வழங்கியுள்ள நன்கொடைகள் மூலம் அளிக்கப்படுகிறது (அதன் விபரங்கள் கீழே வகைப்படுத்தப்பட்டுள்ளது).
அருப்புக்கோட்டையில் உள்ள கல்லூரணி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள நம்மவர் படிப்பகத்தில் படித்துப் பயன்பெற கிடைக்கபெறும் நூல்கள்.
Competitive Examination, Learning English, Books for Children / Comics, Simple English Books, Self-Development, Environmental Science, Science, Nammavar Recommendations, Political, Tamil Litrature, World and Indian History, English Dictionary, Political Leaders, Constitution of India Acts, Literary Translation & Encyclopedias (தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பட்டியல் கீழே வழங்கப்பட்டுள்ளது)
போட்டித் தேர்வுகள், ஆங்கிலம் கற்றல், குழந்தைகளுக்கான புத்தகங்கள் மற்றும் சித்திரக்கதைகள், எளிய ஆங்கில புத்தகங்கள், சுய முன்னேற்றம்/வளர்ச்சி, சுற்றுச்சூழல் அறிவியல், அறிவியல், நம்மவர் பரிந்துரைகள் (BIGG BOSS எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நம்மவரால் பரிந்துரை செய்யப்பட்ட புத்தகங்கள்), அரசியல், தமிழ் இலக்கியம், உலக மற்றும் இந்திய வரலாறு, ஆங்கில அகராதி, அரசியல் தலைவர்கள், இந்திய அரசியலமைப்புச் சட்டம், இலக்கியம் மொழிபெயர்ப்பு மற்றும் கலைக்களஞ்சியங்கள்.