ஜனவரி 09, 2025

இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த திரு.வி.நாராயணன் அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பது தமிழகத்திற்கு பெரும் சேர்க்கிறது என மக்கள் நீதி மய்யம் பெரும் மகிழ்வை வாழ்த்துச் செய்தியாக வெளியிட்டுள்ளது.

“இஸ்ரோ தலைவர் வி.நாராயணனுக்கு மக்கள் நீதி மய்யம் வாழ்த்து. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த திரு. வி.நாராயணன் அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பது ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பெருமை சேர்க்கும் செய்தியாகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் பயின்று, கடின உழைப்பாலும், திறமையாலும் தற்போது மிக உயர்ந்த நிலையை அடைந்துள்ளார். நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் விண்வெளி ஆய்வுத் திட்டங்களில் தொடர்ந்து பங்களித்து வரும் திரு. நாராயணன் அவர்கள் தலைமையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இன்னும் பல சிகரங்களைத் தொடும் என்ற நம்பிக்கை உள்ளது. தொடர்ந்து அவர் மகத்தான சாதனைகளை புரிய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வாழ்த்துகிறது.” – மக்கள் நீதி மய்யம்