சனவரி ‘ 14, 2025
தமிழரின் பாரம்பரியம் மிக்க திருநாள் என்றால் அது தை மாதம் முதல் நாள் தான். உலகத் தமிழர்கள் அனைவரும் தமது உளம் மகிழ கொண்டாடும் தைத்திருநாள் பொங்கல் விழாவாக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. உழவர்களை போற்றுதலும், உழவர்களுக்கு உறுதுணையாக திகழும் கால்நடைகளை அலங்கரித்து மகிழ்வதும் பொங்கல் நாட்களில் நிகழும். நமது மண் நமது மக்கள் என போற்றும் நாளே தைத்திருநாள் ஆகும். சொல்லில் அடங்கா இந்நன்னாளில் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை, இனிப்புகளை பரிமாறிக் கொள்வதும் தமது உறவுகளை கண்டு மகிழ்வதும் மிகச் சிறப்பு.
விளையும் வயல்கள், உழுது, சமன் செய்து, விதைத்து, நீர் பாய்ச்சி, வளர்த்து நெற்கதிர்கள் மீண்டும் பூமி பார்த்துச் சாய்கையில் அறுவடை செய்திடும் நாளில் மக்கள் அனைவருக்கும் மனதிற்குள் உற்சாகம் பொங்கும் பசி நீக்கும் அடையாளமாக திகழும் அறுவடை நாளில் தனது உற்சாக வாழ்த்துகளை பூக்கள் போல அள்ளித் தெளித்துள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள்.
“வரப்பை உயர்த்தினால் நீர் உயர்ந்து, நெல் செழித்து, வாழ்வு வளம் பெறும், நாடு நலம் பெறும் என்பதை உணர்ந்தவர்கள் தமிழர்கள். அறுவடைத் திருநாளில் நம் உழைப்பை உயர்த்துவோம், சிந்தனையின் தரத்தை உயர்த்துவோம். பொங்கல் திருநாளில் அன்பு பொங்கட்டும்.” – திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்
https://twitter.com/ikamalhaasan/status/1878985500767465879
https://twitter.com/maiamofficial/status/1879015274181251460
https://twitter.com/rakeshshamsher/status/1879055318648508847
நன்றி : மக்கள் நீதி மய்யம் & சமூக ஊடக செய்திகள்