திருநெல்வேலி – செப்டெம்பர் 24, 2022
திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மீது நவீன தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது என போராட்டம் நடத்தியுள்ளனர் தூய்மைப் பணியாளர்கள். அது குறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம் வருமாறு :
ஊதிய உயர்வு சரியாக வழங்கப்படவில்லை என்றும், புதிய வருகைப் பதிவேடு முறை தங்களை அலைக்கழிப்பதாகவும், மாநகராட்சி அலுவலர்கள் நவீன தீண்டாமையை கடைப்பிடிப்பதாகவும் கூறி 700க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் நெல்லை மாநகராட்சி அலுவலகம் முன்பு இன்று போராட்டம் நடத்தியுள்ளனர்.
சுகாதாரம் காக்கும் தூய்மைப் பணியாளர்களின் உரிமைகளைக் காப்பதும், நியாயமான ஊதியம் கொடுப்பதும் அரசின் அடிப்படைக் கடமையாகும். நெல்லையில் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இதுபோன்ற போராட்டங்கள் தொடர்ந்து நிகழ்ந்துவருவதைக் கருத்தில்கொண்டு தமிழக அரசானது தூய்மைப் பணியாளர்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுகாணவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது. – மக்கள் நீதி மய்யம்
https://www.dailythanthi.com/News/State/sanitation-workers-strike-800424
https://www.dinakaran.com/news_detail.asp?Nid=802316