சென்னை – நவம்பர் 29, 2௦22
சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும்! மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். – மாநில செயலாளர் திரு முரளி அப்பாஸ் அறிக்கை



சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட மரப்பாலத்தை வெகுசன மக்களும் உபயோகிப்பதால் மாற்றுதிரனாளிகள் உபயோகிப்பதில் சிக்கல் வரும் என மக்கள் நீதி மய்யம் கேட்டுக் கொண்டதையடுத்து மேலும் புகார்கள் எழுந்ததையொட்டி தமிழக அரசின் சென்னை மாநகராட்சியும் காவல்துறையும் இணைந்து காவலர்களை நியமனம் செய்துள்ளது
