சென்னை : ஏப்ரல் 01, 2025

தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் சீரிய தலைமையில் இயங்கி வரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் 34 ஆவது வட்டம், பெரம்பூர் தொகுதியில் (ம.நீ.ம பெரம்பூர் மாவட்டம்) புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் மற்றும் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதல்படி மாவட்டச் செயலாளர் திரு.V. உதயகுமார் அவர்களின் ஏற்பாட்டில் 34 ஆவது வட்டம் நிர்வாகிகள் உடனிருந்து செயலாற்ற இந்நிகழ்வு கடந்த ஞாயிறன்று சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பொதுமக்கள் பெருந்திரளாக வந்திருந்து நீர் மோர் பெற்றுக் கொண்டு தலைவர் மற்றும் நிர்வாகிகள் அனைவரையும் வாழ்த்தினர். மேலும் மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்களாக இணைய விருப்பம் தெரிவித்து 30 ற்கும் மேற்பட்டோர் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளை அணுகி உடனடியாக தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

நன்றி : மக்கள் நீதி மய்யம்