சென்னை : பிப்ரவரி 14, 2023
ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.திருமகன் ஈவெரா அவர்களின் அகால மரணமடைந்தார். எனவே இடைதேர்தல் நடக்கவிருப்பதை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் காங்கிரஸ் கட்சி வேட்பாளாரான திரு EVKS இளங்கோவன் அவர்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறது. வரும் 19 ஆம் தேதியன்று தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் வாக்கு சேகரித்து பிரச்சாராம் செய்யவிருக்கிறார் அதற்கான பயண அட்டவணையும் மற்றும் பொறுப்பாளர்கள் பலரையும் அறிவித்திருக்கிறது.



