சென்னை – மார்ச் : 24, 2024
வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் I.N.D.I.A கூட்டணிக்கு ஆதரவளித்து போட்டியிடும் வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்திட கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழுவினருடன் மேற்கொண்ட ஆலோசனையின் பேரில் முடிவு செய்யப்பட்டு வருகின்ற 29.03.2024 முதல் தமிழகம் முழுவதும் தனது பிரச்சாரத்தை துவக்குகிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள். அதற்கான சுற்றுப்பயண விபரத்தை இன்று நடைபெற்ற தேர்தலுக்கான பிரச்சார வழிகாட்டுதல் கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது ம.நீ.ம ஊடகப்பிரிவு.
2024 இந்தியப் பாராளுமன்றத் தேர்தல் திமுக தலைமையிலான கூட்டணியை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர், நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்களின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண விபரம்.


#KamalHaasan #MakkalNeedhiMaiam