தூத்துக்குடி ஜூன் 06 2021

நாம் எப்போதும் உயிர் காக்கும் மருத்துவர்களை பாராட்டியும் ஈடினையற்றவர்கள் என வெகுவாக புகழ்ந்தும் அவர்களின்பால் பெரு மதிப்பும் வைத்துள்ள நாம் சுற்றுப்புறத்தை தூய்மையாகவும் வியாதிகள் நம்மை அண்டாமல் வைத்துக் கொள்ள உதவும் முன்களப்பனியாளர்கள் ஆன துப்புரவு தொழிலாளர்களை மறந்து விடுவோம். நாம் தொடவே அஞ்சும் கழிவுகளை கொஞ்சமும் முகம் சுழிக்காமல் அவற்றை அகற்றிவிட்டு அவ்விடத்தை சுத்தம் செய்து வரும் அந்த நன்மனிதர்களை நிச்சயம் போற்றிட வேண்டும்.

கௌவரவப்படுத்தும் வகையில் அவர்களை வாழ்த்தி ஆரத்தி எடுத்து மரியாதை செய்து வணங்கி அவர்களுக்கு தேவையான இரும்புச்சத்து கொண்ட சத்தான உணவுகளான தர்பூசணி அன்னாசிபழம் அவித்த முட்டை கிராம்பு துளசி இலை முருங்கைக்கீரை இஞ்சிச்சாறு எலுமிச்சை மற்றும் முழு நெல்லிக்காய் வழங்கினர் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்.