தமிழக சட்டசபை கூட்டம் நடந்து வரும் நிலையில் அதை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தினர் ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தில் சட்டசபை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில் இந்த சட்டசபை கூட்டம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை.

இதை சுட்டிக்காட்டிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சட்டசபை நிகழ்ச்சிகளை வாக்குறுதி அளித்தவாரே நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் இதை தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்தினர் ட்விட்டரில் #பயமா_முதல்வரே #சட்டசபை_நேரடி_ஒளிபரப்புஉள்ளிட்ட ஹேஷ்டேகுகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.