பனமரத்துப்பட்டி ஒன்றிய 9வது வார்டில் மநீம சார்பில் போட்டியிட விண்ணப்பித்திருந்த பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர் உள்ளூர் திமுக பிரமுகரால் அச்சுறுத்தப்பட்டு வேட்புமனுவும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. உள்ளாட்சித்தேர்தல் நேர்மையாக நடைபெறும் என்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.

https://twitter.com/ThanthiTV/status/1441957469685633027?s=08

அதிகாரம் கையில் இருப்பதைப் பயன்படுத்தி ஆளுங்கட்சியினர் அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிடத் துவங்கியிருப்பது கண்ணுக்குப் புலனாகிறது. இப்படிப்பட்ட சூழலில் உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக, தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி நடக்குமா என்ற கேள்விகள் வலுவாகின்றன.


எளிய  மக்களின் கைகளுக்கு அதிகாரம் சென்று சேர்வதை உறுதிப்படுத்த வேண்டிய ஆளுங்கட்சியானது, தனது ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களை அடக்கி ஒடுக்குவது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது