கோவை – கல்லுக்குழி 25 செப்டம்பர் 2021

கோவை மாவட்டம் தெற்கு தொகுதி கல்லுக்குழி பகுதி மக்கள் நேற்று வரை தங்கள் வீடுகளுக்கு செல்ல பாறை மீது நடக்க வேண்டும் என்கிற நிலை இருந்து வந்தது, நடக்கையில் பிசகி தவறி விழுந்த துயரங்கள் அதனால் பெரும் இன்னல்களை சந்தித்து வந்த மக்கள் நிலை அறிந்து செயலில் இறங்கியது மய்யம்.

விறுவிறுவென அதற்கான பணிகளை திட்டமிட்டு துவங்கியது நமது மய்யம். பாறைகளால் நிறைந்து இருந்த ஏற்றத்தாழ்வு கொண்ட சீராக இல்லாத பாதையை சிறப்பான கட்டுமானம் கொண்டு படிக்கட்டுகளாய் கட்டமைத்து மக்கள் சென்றுவரும் பாதையாய் மாற்றித் தந்தனர் நம் மய்யயத்தினர்.

இன்று முதல் சீரமைக்கப்பட்ட பாதையில் எளிதாக பாதுகாப்பாக செல்கிறார்கள்.

சீரமைத்த கோவை மக்கள் நீதி மய்யத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!